இலங்கையின் கோல்ப் விளையாட்டினை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன், இரண்டாவது முறையாகவும் இலங்கை கோல்ப் ஒன்றியத்தினால் (SLGU) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “உள்ளூர் கழக கோல்ப் சம்பியன்ஷிப் தொடர் – 2017” இம்மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் திகன Victoria Golf & Country Resort இல் நடைபெறவுள்ளது.
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க தொடரில் சென்றலைட்ஸ், K.C.C.C அணிகள் சம்பியன்
எதிர்வரும் 2020ஆம் ஆண்டினையும் அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளினையும் மையமாகக்கொண்டு இலங்கையில் கோல்ப் விளையாட்டினை முழுமையாக பிரபலப்படுத்தும் எண்ணத்தோடு “இலங்கையின் கோல்பை மீளக்கட்டியெழுப்புதல்“ எனும் தொனிப்பொருளில் இந்த கோல்ப் தொடரினை இலங்கை கோல்ப் ஒன்றியத்தின் தலைவர் திரு. பிரியத் பெர்ணாந்து மற்றும் ஒன்றியத்தின் ஏனைய உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
நாட்டில் மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்திருக்கும் இத்தருணத்தில் இலங்கையின் பல பகுதிகளிலும் சிறந்த முகாமைத்துவத்துடன் கூடிய கோல்ப் விளையாட்டிற்கான வசதிகள் நாட்டின் பாதுகாப்புத் துறையினரின் பங்களிப்புடன் தற்போது சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் கோல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் பொதுமக்கள் என பல தரப்பினரும் பயனடையக் கூடியதாக இருக்கின்றது.
இது இவ்வாறிருக்கையில், இலங்கை கோல்ப் ஒன்றியத்தினால் இவ்விளையாட்டினை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் முதல்முறையாக கடந்த 2016ஆம் ஆண்டில் இச்சுற்றுத் தொடர், இலங்கை உள்ளூர் கழக சவால் கிண்ணத்திற்காக தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ள இந்த ஆண்டுக்கான தொடரில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொள்ள இலங்கையின் 6 கழகங்கள் போட்டியிடுகின்றன.
முதல் தொடரின் சம்பியன் ஆகியிருந்த விக்டோரியா கோல்ப் கழகம், இலங்கை இராணுவப்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கையின் பழமைவாய்ந்த கோல்ப் கழகங்களான கொழும்பு றோயல் கோல்ப் கழகம், நுவரெலியா கோல்ப் கழகம் ஆகியவையே இம்முறை பங்குகொள்ளும் ஆறு கழங்களாகும்.
ரினௌன், கொழும்பு அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மொறகஸ்முல்ல மற்றும் ஜாவா லேன்
இத்தொடரிற்கு ஸடப்பல்போர்ட் முறையில் புள்ளிகள் வழங்கப்பட இருப்பதோடு, தொடரில் பங்கேற்கும் கழகங்கள் 5 வீரர்கள் கொண்ட 5 உப அணிகளுடன் பங்கேற்க முடியும்.
அத்துடன், தொடரில் பங்கேற்று சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் 5 உப அணிகளில் ஒன்றுக்கு தொடரின் இறுதியில் சிறந்த அணிக்கான கிண்ணம் வழங்கப்படவுள்ளது.
இந்த வருடத்திற்கான தொடரிற்கு பிரைம் லேன்ட்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. இத்தொடரிற்காக அனுசரணை வழங்கி இலங்கை கோல்ப் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதில் மனம் குளிர்வதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுதத் சிறிவர்தன தெரிவித்திருந்தார்.
இத்தொடரின், முதல் நாள் ஆட்டத்தில் அதாவது 18ஆம் திகதியில் உள்ளூர் கழகங்கள் இடையிலான போட்டியும், இரண்டாம் நாளில் இலங்கை கோல்ப் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நிகழ்வுகளுடன் விசேட வீரர்கள் கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.