ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இறுதிக்கட்ட தெரிவுகள் ஆரம்பம்

212
2nd National trials

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய குழாமை தெரிவு செய்யும் இறுதிக்கட்ட தெரிவு நடவடிக்கைகளை ஜூன் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் டயகம மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் நடாத்தவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் (AASL) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இந்தியாவிலுள்ள புபனேஸ்வரில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் இதன்போது தெரிவுசெய்யப்படவுள்ளது.

கடந்த மே மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தெரிவு நடவடிக்கைகள், ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை மாதத்துக்கு மாற்றப்பட்டதால் பிற்போடப்பட்டிருந்தது. அத்துடன் போட்டி நடைபெறவிருந்த ராஞ்சி நகரிலிருந்து இருந்து புபனேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், இந்த தெரிவுக்கு பங்கேற்க உள்ள வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருந்தால் மாத்திரமே தெரிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம், இவ்வருட இறுதியில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தின் தரத் தகுதி பெற்றுக்கொள்ளவும் வழியமைத்து கொடுக்கின்றது.

தெரிவுக்கான குறைந்த பட்ச தகைமைகள்

நிகழ்வு

குறைந்த பட்ச தகைமைகள்

 

ஆண்

பெண்

100m 11.10secs 12.80 secs
200m 22.40 secs 26.00 secs
400m 48.80 secs 58.00 secs
800m 1:56.00 secs 2:20.00 secs
1500m 4:00.00 secs 4:52.00 secs
5000m 15:30.00 secs 18:30.00 secs
10000m 32:.00.00 secs 39:00.00 secs
3000m St CH 9:35.00 secs 11.45.00 secs
100 Hurdle 16.50 secs
110m Hurdles 15.40 secs
400m Hurdles 55.00 secs 65.00 secs
High Jump 2.00m 1.58m
Long Jump 7.20m 5.50m
Triple Jump 14.80m 12.00m
Pole Vault 4.30m 3.00m
Shot Put 12.75m 10.50m
Discus Throw 38.00m 34.00m
Javeline Throw 62.00m 38.00m
Hammer Throw 40.00m 38.00m
Heptathlon 3500 points
Decathlon 5000 points