2ஆவது இளையோர் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக 12 பேர்

301

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தாய்லாந்தின் பெங்கொக் தேசிய அரங்கில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்வற்காக இலங்கையின் 12 இளம் வீர வீராங்கனைகள் தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு டோஹா கட்டாரில் முதன் முதலில் இப்போட்டிகள் நடாத்தப்பட்டன. அதில் நான்கு பதக்கங்களை கைப்பற்றி இலங்கை 1௦ஆவது இடத்தை பெற்றிருந்தது. அந்த வகையில், மகளிர் பிரிவு 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப்  போட்டியில் (Hurdles) யாமினி துளஞ்சலி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மக்காவு அணியுடனான போட்டியில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி வெற்றி

மக்காவு அணியுடனான போட்டியில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி வெற்றி

23 வயதுக்கு உட்பட்ட இரண்டாவது ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில்..

குறித்த போட்டியின் ஆடவர் பிரிவில் தர்ஷன ராஜபக்ஷவும், நீளம் பாய்தல் போட்டியில் சாமல் குமாரசிறியும், உயரம் பாய்தல் போட்டியில் ரொஷான் தமிக்கவும் வெள்ளிப் பதக்கங்களுடன் நாடு திரும்பியிருந்தனர்.

எனினும், இம்முறைக்கான போட்டிகளில் இலங்கையின் இளம் வீர வீராங்கனைகள் சிறந்த பெறுபேறுகளுடன் கூடிய பதக்கங்களை பெற்று இலங்கையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்

கடந்த உள்ளூர் மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீர வீராங்கனைகளே இம்முறை இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். அந்த வகையில் ஆடவர் பிரிவில் 9 மெய்வல்லுனர் வீரர்களும், மகளிர் பிரிவில் 3 வீராங்கனைகளும் பங்குகொள்கின்றனர்.

அத்துடன், இவ்வருட இறுதியில் கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறவுள்ள உலக இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு  நவோத்ய சங்கபால (தடை தாண்டல் ஓட்டம்), ரவிஷ்க இந்தரஜித் (400 மீட்டர் ஓட்டம்) மற்றும் இளம் வீரர் அஸ்மிக்க ஹேரத் ஆகியோர் ஏற்கனவே IAAF இன்  போட்டி தரத்துகேற்ற தேவையான தகுதிகளை பெற்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் இலங்கையின் இளம் மெய்வல்லுனர் வீரர்கள் 9 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதோடு, மகளிர் பிரிவில் மூன்று வீராங்கனைகள் 5 போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். சச்சினி திவஞ்சலி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும், அஸ்மிக்க ஹேரத்  2000 மீட்டர் மற்றும் 3000 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சந்துமினி பண்டார 400 மீட்டர் போட்டியில் ஓடவுள்ளார்.

இரண்டாவது இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம்

மகளிர் பிரிவு

சச்சினி திவஞ்சலி (வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலை) – 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்

அஸ்மிக்க ஹேரத் (குளியாபிடிய மத்திய கல்லூரி) – 2000 மீட்டர் மற்றும் 3000 மீட்டர்

சந்துமினி பண்டார (புனித ஜோசப் மகளிர் கல்லூரி, கேகாலை) – 400 மீட்டர்

மேல்டரின் கோலினால் பங்களாதேஷ் விமானப்படை அணியை வீழ்த்திய இலங்கைத் தரப்பு

மேல்டரின் கோலினால் பங்களாதேஷ் விமானப்படை அணியை வீழ்த்திய இலங்கைத் தரப்பு

இன்று பிற்பகல் கொழும்பு ஆஸ்ட்ரோ டர்பில் (Astro Turf) நடைபெற்ற பங்களாதேஷ்..

ஆடவர் பிரிவு

சுராஜ் தினுஷ (மொரகெட்டிய வித்தியாலயம், எபிலிபிடிய) 100 மீட்டர்

சாலிக்க சம்பத்  (புனித பெனடிக்ட் கல்லூரி – கொழும்பு) 200 மீட்டர்

ரவிஷ்க இந்த்ரஜித் (புனித பெனடிக்ட் கல்லூரி – கொழும்பு) 400 மீட்டர்

ஹர்ஷா கருணாரத்ன (எ.ரத்னாயக்க மத்திய கல்லூரி) 800 மீட்டர்

ஷேஹன் காரியவசம்  (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு) 110 மீட்டர்  தடை தாண்டல் ஓட்டம் (Hurdles)

நவோத்ய சங்கபால (மகிந்த கல்லூரி) 400 மீட்டர்  தடை தாண்டல் ஓட்டம் (Hurdles)

சனுக்க கஸ்துரியராச்சி (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை) உயரம் பாய்தல்

பிரமோத் மதுபாஷ்  (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி) நீளம் பாய்தல்

சாருக்க ருக்ஷான் (புனித மேரிஸ் கல்லூரி – சிலாபம்) ஈட்டி எறிதல்

இலங்கை மெய்வல்லுநர் வீரர்கள் பங்குபற்றும் போட்டிகள் பச்சை நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், போட்டி நடைபெறும் நேரம் தாய்லாந்து நாட்டு நேரப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் :  மே 20ஆம் திகதி, 2017 (சனிக்கிழமை)

Event No. Time Event Group Round
Morning Session
 101   8.30   100m   Boy   DEC 1 
102 9.00 Shot Put Girl Final
103 9.30 Long Jump Boy DEC 2
 104   9.30   100m   Girl   Round 
 105   10.00   100m   Boy   Round 
 106   10.30   400m   Girl   Round 
 107   11.00   400m   Boy   Round 
108 11.00 Hammer Throw Boy Final
109 11.00 Shot Put Boy DEC 3
110 11.30 100m Hurdles Girl Round
 111   11.50   110m Hurdles   Boy   Round 
Afternoon Session
112 14.30 Pole Vault Boy Final
113 14.45 High Jump Boy DEC 4
114 15.00 Long Jump Girl Final
115 15.00 100m Hurdles Girl Final
116 15.20 110m Hurdles Boy Final
117 15.40 100m Girl Semi – Final
118 16.00 100m Boy Semi – Final
119 16.20 400m Girl Semi – Final
120 16.40 400m Boy Semi – Final
121 17.00 400m Boy DEC 5

இரண்டாம் நாள் :  மே 21ஆம் திகதி, 2017 (ஞாயிற்றுக்கிழமை)

Event No. Time Event Group Round
Morning Session
201 7.30 5,000m Walk Girl Final
202 8.30 110m Hurdles Boy DEC 6
 203   8.50   3,000m   Girl   Final 
204 9.10 3,000m Boy Final
205 9.30 Discus Throw Boy DEC 7
206 9.50 800m Girl Round
 207   10.10   800m   Boy   Round 
208 10.30 Shot Put Boy Final
209 10.50 Hammer Throw Girl Final
210 11.00 Pole Vault Boy DEC 8
Afternoon Session
211 14.30 Javelin Throw Boy DEC 9
212 15.30 Long Jump Boy Final
 213   15.30   High Jump   Girl   Final 
214 16.00 Discus Throw Girl Final
215 16.00 800m Girl Final
 216   16.15   800m   Boy 

 Final 

217 16.30 1,500m Boy DEC 10
218 16.50 400m Girl Final
219 17.05 400m Boy Final
220 17.20 100m Girl Final
221 17.30 100m Boy Final

மூன்றாம் நாள் :  மே 22ஆம் திகதி, 2017 (திங்கட்கிழமை)

Event No. Time Event Group Round
Morning Session
301 8.00 10,000m Walk Boy Final
302 9.00 100m Hurdles Girl HEP 1
303 9.00 Discus Throw Boy Final
 304   9.20   200m   Girl   Round 
 305   9.50   200m   Boy   Round 
306 10.00 High Jump Girl HEP 2
307 10.20 Triple Jump Girl Final
Afternoon Session
308 14.30 Shot Put Girl HEP 3
309 14.50 Pole Vault Girl Final
310 15.10 High Jump Boy Final
311 15.30 200m Girl Semi – Final
312 15.50 200m Boy Semi – Final
313 16.00 Javelin Throw Girl Final
314 16.30 200m Girl HEP 4
315 16.50 1,500m Girl Final
316 17.05 1,500m Boy Final
317 17.25 Medley Relay Girl Round
318 17.40 Medley Relay Boy Round

நான்காம் நாள் :  மே 23ஆம் திகதி, 2017 (செவ்வாய்க்கிழமை)

Event # Time Event Group Round
Morning Session
401 9.30 400m Hurdles Girl Round
 402   9.50   400m Hurdles   Boy   Round 
 403   9.40   Long Jump   Girl   HEP 5 
Afternoon Session
404 14.00 Javelin Throw Girl HEP 6
405 14.20 Triple Jump Boy Final
406 14.20 400m Hurdles Girl Final
407 14.35 400m Hurdles Boy Final
408 14.50 200m Girl Final
409 15.05 200m Boy Final
 410   15.20   Javelin Throw   Boy   Final 
 411   15.20   2,000m SC.   Girl   Final 
412 15.40 2,000m SC. Boy Final
413 16.00 800m Girl HEP 7
414 16.15 Medley Relay Girl Final
415 16.30 Medley Relay Boy Final

தொடரில் பங்குகொள்ளும் அணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படலாம்.