அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஹெய்லிஸ் இறுதிப் போட்டிக்கு

169

அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் லஹிரு சமரகோனின் அபார பந்துவீச்சின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் பதினொருவர் அணிக்கு எதிரான MCA ப்ரீமியர் லீக் அரையிறுதிப் போட்டியில் ஹெய்லிஸ் அணி 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

இதன் மூலம் மாஸ் யுனிசெல்லா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட ஹெய்லிஸ் அணி தகுதிபெற்றுள்ளது. நேற்று (24) நடைபெற்ற டிமோ அணிக்கு எதிரான அரையிறுதியில் மாஸ் யுனிசெல்லா 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. 

திலகரத்ன சம்பத்தின் அபாரத்தால் மாஸ் ஹோல்டிங்ஸ் இறுதிப்போட்டிக்கு

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான……

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இந்தத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி MCA மைதானத்தில் இன்று (25) நடைபெற்றது. மோட்டியின் நாணய சுழற்சியில் வென்ற வளர்ந்துவரும் பதினொருவர் அணித் தலைவர் சங்கீத் குரே முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். 

எனினும் ஓட்டம் பெறும் முன்னரே சங்கீத் குரே டக் ஆட்டமிழக்க அடுத்த விக்கெட்டுகளும் குறுகிய இடைவெளியில் பறிபோயின. மத்திய வரிசையில் விக்கெட் காப்பாளர் ரந்திக்க டி சில்வா 45 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றதோடு துஷான் விமுக்தி 21 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றார். 

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு வளர்ந்து வரும் பதினொருவர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில் ஹெய்லிஸ் அணி சார்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு சமரகோன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

Photos: SL Emerging vs Hayleys | 27th-Singer MCA T20 – 2nd Semi-Final

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹெய்லிஸ் அணி சார்பில் அதன் தலைவரான தேசிய அணி வீரர் அவிஷ்க பெர்னாண்டோ வாணவேடிக்கை காட்டினார். அவர் சிக்ஸர்கள், பௌண்டரிகளை விளாச அந்த அணியின் வெற்றி இலகுவானது.  

52 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவிஷ்க பெர்னாண்டோ 7 பௌண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றார். 

இதன்போது அவிஷ்க பெர்னான்டோ 2 ஆவது விக்கெட்டுக்கு ரொன் சந்திரகுப்தாவுடன் இணைந்து பிரிக்கப்படாத 140 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இலங்கை A அணி வீரரான ரொன் சந்திரகுப்தா 41 பந்துகளில் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை பெற்றார். 

இறுதியில் ஹெய்லிஸ் அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.     

டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்…..

மாஸ் யுனிசெல்லா மற்றும் ஹெய்லிஸ் A அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை (26) MCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

வளர்ந்துவரும் பதினொருவர் – 146/8 (20) – ரன்திக்க டி சில்வா 43, துஷான் விமுக்தி 34, நிமந்த சுபசிங்க 22, லஹிரு சமரகோன் 4/40, சத்துரங்க டி சில்வா 2/14

ஹெய்லிஸ் – 150/1 (16.5) – அவிஷ்க பெர்னாண்டோ 92*, ரொன் சந்திரகுப்தா 39*, துஷான் விமுக்தி 1/20

முடிவு – ஹெய்லிஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<