ஜோன் கீல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லஹிரு சமரகோன் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் சகலதுறையில் பிரகாசிக்க ஹேலீஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
சீரற்ற காலநிலையால் தடைப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் டி20 தொடர் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகியது.
வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தால் சம்பியனாகியது CCC
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும்…
A பிரிவுக்காக நடைபெற்ற போட்டியொன்றில் ஜோன் கீல்ஸ் மற்றும் ஹேலீஸ் மோதின.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி, பானுக ராஜபக்ஷவின் அரைச்சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பட்டத்தில் ஜோன் கீல்ஸ் அணித் தலைவர் பானுக ராஜபக்ஷ அரைச்சதம் கடந்து 61 ஓட்டங்களையும், ஜெஹான் டேனியல் 43 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 3 விக்கெட்டுக்களையும், சதுரங்க டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹேலீஸ் அணிக்காக லஹிரு சமரகோன் அரைச் சதமடித்து (65) கைகொடுக்க, அந்த அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
ஹேலீஸ் அணிக்காக கித்துருவன் விதானகே ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்.
போட்டியின் சுருக்கம்
ஜோன் கீல்ஸ் – 197/9 (20) – பானுக ராஜபக்ஷ 61, ஜெஹான் டேனியல் 43, லஹிரு மிலந்த 20, சதுரங்க டி சில்வா 3/37, லஹிரு சமரகோன் 2/50
ஹேலீஸ் – 198/5 (18.4) – லஹிரு சமரகோன் 65, கித்துருவன் விதானகே 48*, சதுரங்க டி சில்வா 33*, ரொன் சந்திரகுப்த 33, ஜெஹான் டேனியல் 2/44
முடிவு – ஹேலீஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<