26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்

252

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான (2019/20) உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான Major A மற்றும் Major B கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இன்று (31) முதல் இடம்பெறவுள்ளன. 

நான்கு நாட்களைக் கொண்டதாக A  மற்றும் B பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

MCA ப்ரீமியர் லீக் ஹெய்லிஸ் அணி வசம்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான MCA………..

இதன்படி, மேஜர் பிரிவுக்கான போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளதுடன், அதில் இடம்பிடித்துள்ள 14 அணிகளும் (ஒரு குழுவில் 7 அணிகள்) தொடர்ந்து தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் ஏழு வாரங்கள் போட்டிகளில் விளையாட வேண்டும்.  

முதல் சுற்று ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களையும் பெற்றுக் கொள்ளும் அணிகள் ப்ரிமியர் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகும்.   

இதில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளும் அணி, இம்முறை பருவகாலத்தின் சம்பியனாகத் தெரிவு செய்யப்படவுள்ளதுஇதேநேரம், சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகாத எஞ்சிய 6 அணிகளும் கோப்பைக்கான பிரிவில் போட்டியிடும்.  

இந்த நிலையில், மேஜர் பி பிரிவில் 12 அணிகள் களமிறங்கவுள்ளதுடன், இதன் அனைத்துப் போட்டிகளும் Robin Round முறையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளும் அணி சம்பியனாகத் தெரிவாகும்.

அத்துடன், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகள் அனைத்தும் மூன்று நாட்கள் கொண்டதாக நடைபெறும்.  

இறுதியாக, கடந்த வருடம் நடைபெற்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் மேஜர் பிரிவில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 6ஆவது தடவையாகவும் சம்பியனாகத் தெரிவாகியது. இதில் சரசென்ஸ் கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.   

இதேநேரம், லங்கா லயன்ஸ் கழகம் மேஜர் பி பிரிவில் சம்பியனாகத் தெரிவாகி இம்முறை பருவகாலத்தில் மேஜர் பிரிவில் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அத்துடன், கடந்த பருவகாலத்தில் பிரிவில் இடம்பிடித்து கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை துறைமுக அதிகாரி சபை அணி, இம்முறை பி பிரிவுக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இம்முறை போட்டித் தொடரின் முடிவில் கோப்பைக்கான பிரிவில் கடைசி இடத்தைப் பெற்றுக் கொள்ளும் 3 அணிகளுக்காகவும் பிரத்தியேகமாக தேர்வுப் போட்டியொன்று நடைபெறவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து மேஜர் பிரிவில் 12 அணிகள் மாத்திரம் விளையாடவுள்ளன

இதேவேளை, பி பிரிவில் உள்ள அணிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை போட்டித் தொடரில் குறித்த பிரிவில் கடைசி 3 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் வெளியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், 2019/2020 Governors கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய யுனிச்செலா விளையாட்டுக் கழகம் அடுத்த வருடம் முதல் மேஜர் பி பிரிவுக்காக விளையாடவுள்ளன

கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார

இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, ………

மேலும், 2021/2022 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கெண்ட போட்டித் தொடரின் மேஜர் மற்றும் மேஜர் பி ஆகிய 2 பிரிவுகளிலும் தலா 10 அணிகளை பங்கேற்கச் செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது

அதுமாத்திரமின்றி, இம்முறை போட்டித் தொடரில் இருந்து SG பந்துகளை பயன்படுத்தவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

SG பந்துகள் பெரும்பாலும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் நடைபெறுகின்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான போட்டித் தொடர்களில் அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகின்ற பந்தாகும்

வழமையான டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்துகின்ற பந்தைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமாக காணப்படுவதுடன், இந்தியாவில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தப் பந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<