இலங்கையில் 25 விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல்

710

இலங்கையின் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் 25 விளையாட்டுப் பாடசாலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தங்கால்லையில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

விளையாட்டுத்துறை அமைச்சராக தான் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் முதலில் நாட்டில் 25 விளையாட்டுப் பாடசாலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக, ஏற்கனவே உள்ள விளையாட்டுப் பாடசாலைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கையில் உள்ள பாடசாலைகளின் விளையாட்டை நல்லதொரு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின், சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, எதிர்வரும் வாரங்களில் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விளையாட்டுப் பாடசாலைகளில் சகல விளையாட்டுக்களையும் அபிவிருத்தி செய்வதற்கு அடுத்த வருடம் முதல் நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்காகவும் சகல வசதிகளையும் கொண்ட மைதானமொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு

மறுபுறத்தில் நாட்டில் தேசிய விளையாட்டுக் கொள்கையொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவும், புதிய விளையாட்டு சட்டமொன்றை கொண்டு வரவும், குறுகிய மற்றும் நீண்டகால விளையாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க