ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மே மாதம் சீனாவில் நடைபெறவிருந்த 24ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு மெய்வல்லுனர் சங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய வலய நாடுகளின் ஒரு தகுதிகாண் போட்டியாகவும், வரப்பிரசாதமாகவும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமைந்திருந்தது.
>>புத்தாண்டின் ஆரம்பத்தில் இரு மெய்வல்லுனர் தொடர்கள் ஒத்திவைப்பு
எனினும், தற்போது அந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஆசிய நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுனர்களுக்கு பாரிய இழப்பாக அமைந்துவிட்டது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் உலக மெய்வல்லுனர் தரவரிசையில் ஆசிய நாடுகளுக்கான பிரிவில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
ஒருவேளை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் திட்டமிட்டபடி நடைபெற்றால் அங்கு வீரர்கள் வெளிப்படுத்துகின்றி திறமைகளை வைத்து ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
எதுஎவ்வாறாயினும், அடுத்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 2024இல் தாய்லாந்தின் படாயாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரையும், சீனாவின் சன்யா நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழா, ஆசிய மரதன் ஓட்ட சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய உள்ளக விளையாட்டு விழா என்பவற்றை ஒத்திவைக்க ஆசிய ஒலிம்பிக் சங்கம் கடந்த கடந்த மாதம் நடவடிக்கை எடுத்தது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<