நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் (AASL) 23ஆவது முறையாக மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை நடாத்தவிருந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன
அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு…
அதேநேரம், ஒத்திவைக்கப்பட்டிருக்கும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் யாவும், செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மீள நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வீர, வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர முக்கிய சந்தர்ப்பமாக இந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமைகின்றது. இந்நிலையில் இதில் பங்கெடுக்கும் வீர, வீராங்கனைகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சரியான பயிற்சிகளை மேற்கொள்வதில் இடையூறினை எதிர்கொண்டிருக்கின்றனர். இதனாலேயே, தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், இந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரே அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறும் வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடைசியாக நடைபெற்று முடிந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றிய இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாம், 3 தங்கப் பதக்கங்களையும், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்ததோடு, குறித்த தொடர் மூலமே இலங்கை அதிக பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க