இலங்கை கால்பந்து அணியின் ஐந்தாம் கட்டத்திற்குரிய வதிவிடப்பயிற்சி முகாம், இன்று (06) பெத்தகானயில் உள்ள தேசிய கால்பந்து பயிற்சி முகாமில் ஆரம்பித்திருக்கின்றது.
தேசிய பயிற்சிக் குழாத்தில் இருந்து பாசித் வெளியே ; ரொஷான் இணைப்பு
இந்த வதிவிடப்பயிற்சி முகாமிற்கு, இலங்கை தேசிய கால்பந்து அணியினுடைய 23 பேர் அடங்கிய குழாம் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, தெரிவு செய்யப்பட்டிருக்கும் கால்பந்துக் குழாம் உயிர் பாதுகாப்பு வலயத்தினுள் (Bio Bubble), 2022ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளுக்காகவும், ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுக்காகவும் தயார்படுத்தல்களை மேற்கொள்கின்றது.
இதேநேரம், இந்த வதிவிடப் பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 23 வீரர்கள் மற்றும் 8 போட்டி உத்தியோகத்தர்கள் என அனைவரும் PCR மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, அதில் என்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் எவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. எனினும், இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வீரர்கள் மற்றும் போட்டி உத்தியோகத்தர்கள் தொடர்பான PCR முடிவுகளுக்காக காத்திருக்கின்றது.
அதேநேரம், இந்த 23 பேர் அடங்கிய இலங்கை கால்பந்து குழாமில் இலங்கைக்கான இரட்டைப் பிராஜவுரிமை விதிமுறைகளைப் பூர்த்தி செய்த மேர்வின் ஹமில்டன், ரீப் பீரிஸ் மற்றும் டிலோன் டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், இந்த வீரர்களுடன் சேர்த்து இலங்கை கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் பசால், டக்சன் பியுஸ்லஸ் ஆகியோரும் பயிற்சிகளுக்காக உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனினும், இந்தப் பயிற்சிக் குழாத்தில் சபீர் ரசூனியா மற்றும் மொஹமட் ரிப்கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாக அமைகின்றது.
இலங்கை கால்பந்து குழாம்
சுஜான் பெரோ (அப் கண்ட்ரி லயன்ஸ்), பிரபாத் ருவன் அனுரசிறி (ப்ளூ ஈகிள்ஸ்), தனுஷ்க ராஜபக்ஷ (நியூ யங்ஸ்), ஹர்ஷ பெர்னாந்து (ப்ளூ ஈகிள்ஸ்), சுனில் ரோஷன் அபுஹாமி (டிபன்டர்ஸ்), ரீப் செபாஸ்டியன் பீரிஸ், சமோத் டில்ஷான் (கொழும்பு), ஷரித்த ரத்நாயக்க (கொழும்பு), டக்சன் பியுஸ்லஸ் (TC விளையாட்டுக் கழகம்), சதுரங்க மதுஷன் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மேர்வின் ஹமில்டன் , ஷலன சமிர (கொழும்பு), ஜூட் சுமன் (ரினௌன்), மொஹமட் முஸ்தாக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் பசால் (ப்ளூ ஸ்டார்), சர்வான் ஜோஹர் (கொழும்பு), கவிந்து இஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), டில்லோன் டி சில்வா (QPR), அஹமட் வீசீம் ராசிக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் ஆகிப் (கொழும்பு), அசிகுர் ரகுமான் (டிபன்டர்ஸ்), மொஹமட் ஹஸ்மீர் (சீ ஹோக்ஸ்), சுபுன் தனன்ஞய விஜேசிங்க (ரெட் ஸ்டார்ஸ்))
மேலதிக வீரர்கள்
ரிப்கான் ஹொமட் (டிபன்டர்ஸ்), ரிஸ்கான் பைசர் (ஜாவா லேன்), மஹேந்திரன் டினேஷ் (பொலிஸ்), தரிந்து தனுஷ்க (நியூ யங்ஸ்), சபீர் ரசூனியா (கொழும்பு), மதுஷன் பெர்னாந்து (ப்ளூ ஈகிள்ஸ்)
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<