இங்கிலாந்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவுக்கு இலங்கை அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள வீரர்கள் வரைவுக்கு 16 நாடுகளிலிருந்து மொத்தமாக 284 வெளிநாட்டு வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், இலங்கை அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.
>>என்னுடைய உடல் தகுதியை விரைவில் நிரூபித்துக்காட்டுவேன் – பானுக
அதன்படி, வனிந்து ஹஸரங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் 50,000 பவுண்டுகள் தொகைக்கான வீரர்கள் பிரிவில் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கை வீரர் திசர பெரேரா மற்றும் தற்போதைய இலங்கை ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக ஆகியோர் 40,000 பவுண்டுகளுக்கான வீரர்கள் பிரிவில் பதிவுசெய்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட வீரர்களை தவிர்த்து தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, தனுஷ்க குணதிலக்க, லசித் எம்புல்தெனிய, அவிஷ்க பெர்னாண்டோ, அசேல குணரத்ன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, சுரங்க லக்மால், லஹிரு மதுசங்க, ரமேஷ் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன், துஷான் ஹேமந்த மற்றும் இசுரு உதான ஆகியோர் தங்களுக்கான இருப்பு தொகையை அறிவிக்காமல் பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.
தி ஹண்ட்ரட் வீரர்கள் வரைவு நாளைய தினம் (05) நடைபெறவுள்ள நிலையில், போட்டித்தொடர் ஆகஸ்ட் 3ம் திகதி முதல் செப்டம்பர் 3ம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<