21ஆவது வடக்கின் சமர் ஒருநாள் போட்டியினைக் கைப்பற்றிய யாழ். மத்தி

201

21ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் கிரிக்கெட் ஒருநாள் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி

கடந்த சனிக்கிழமை (16) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் உதயனன் அபிஜோய்சாந்த் 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, அணித்தலைவர் நேசகுமார் ஜெசியல் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

யாழ். மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சில் முரளி திசோன் 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நிசாந்தன் அஜய் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 30 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களுடன் அடைந்தது.

யாழ். மத்தியின் வெற்றியினை உறுதிப்படுத்திய அதன் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அருமைத்துறை சிந்துஜன் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தார். இதேவேளை சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சில் அருள்சீலன் கவிஷன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி – 116 (41.2) உதயனன் அபிஜோய்சாந்த் 30, முரளி திசோன் 18/4

யாழ். மத்திய கல்லூரி – 118/6 (30) அருமைத்துரை சின்துஜன் 27*

முடிவு யாழ். மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<