அபுதாபி T10 லீக் தொடரில் மொத்தம் 21 இலங்கை வீரர்கள்

Abu Dhabi T10 League 2024 

158
Abu Dhabi T10 League 2024 

2024ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடரில் மொத்தமாக இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த 21 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

>>மேற்கிந்திய தீவுகள் T20I தொடரினை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி<<

அபுதாபி T10 லீக் தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரின் வீரர்கள் குழாம்கள் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன 

அந்தவகையில் உறுதி செய்யப்பட்ட குழாம்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களான அதிரடி துடுப்பாட்டவீரர் குசல் பெரேரா, மதீஷ பதிரன மற்றும் 19 வயது நிரம்பிய அறிமுக வீரர் துமிந்து செவ்மின ஆகியோர் தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படும் நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர் 

அதேவேளை சென்னை பிரேவ் ஜாக்குவார் அணி இம்முறை தொடரில் ஆறு இலங்கை வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கின்றது. அதன்படி குறித்த ஆறு வீரர்களில் திசர பெரேரா, நுவான் துஷார, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் முக்கியமானவர்களாக காணப்படுகின்றனர் 

மறுமுனையில் முன்னணி வீரர்களாக காணப்படும் அஞ்செலோ மெதிவ்ஸ் (டீம் அபுதாபி), இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்க (பங்களா டைகர்ஸ்), வனிந்து ஹஸரங்க (டெல்லி புல்ஸ்), மகீஷ் தீக்ஸன (டெக்கான் கிளேடியேட்டர்ஸ்) மற்றும் துனித் வெல்லாலகே (அஜ்மான் போல்ட்ஸ்) ஆகியோரும் அபுதாபி T10 லீக்கில் இணைக்கப்பட்டுள்ளனர் 

அபுதாபி T10 லீக்கின் 2024ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 02ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை வீரர்கள் அபுதாபி T10 லீக் முழு விபரம் 

அஜ்மான் போல்ட்ஸ்செவோன் டேனியல், துனித் வெல்லாலகே 

 

பங்களா டைகர்ஸ்தசுன் ஷானக்க, ரவிந்து ரத்நாயக்க 

 

சென்னை பிரேவ் ஜாக்குவார்ஸ்திசர பெரேரா, நுவான் துஷார, பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய, காருக்க சங்கேத், கவிந்து நதீஷான் 

 

டெல்லி புல்ஸ்வனிந்து ஹஸரங்க, கசுன் ராஜித, பவன் ரத்நாயக்க  

 

நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ்மதீஷ பதிரன, குசல் பெரேரா, துமிந்து செவ்மின 

 

டீம் அபுதாபிமுதித லக்ஷான், அஞ்சேலோ மெதிவ்ஸ் 

 

UP நவாப்ஸ்பினுர பெர்னாண்டோ  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<