இளம் வீரர்களின் பங்களிப்பினால் இராணுவ கழகத்தை வீழ்த்தி சம்பியனானது SSC

SLC Major Club T20 Tournament 2020/21

298

திலின கண்டம்பியின் பயிற்றுவிப்பின் கீழ் 2020/21 பருவகாவத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான டி-20 லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை SSC கழகம் வெற்றி கொண்டது. 

இராணுவ கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் SSC கழகம் சார்பில் துடுப்பாட்டத்தில் மிரட்டிய 22 வயதான விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான க்ரிஷான் சன்ஜுல அரைச் சதம் கடந்து 71 ஓட்டங்களை எடுக்க, பந்துவீச்சில் 23 வயதான பந்துவீச்சு சகலதுறை வீரரான ஹிமேஷ் ராமநாயக்க 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர்

>> அவிஷ்கவின் அரைச்சதத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த SSC

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், வேகப்பந்தவீச்சு பயிற்சியாளருமான சம்பக்க ராமநாயக்கவின் மகன் ஹிமேஷ் ராமநாயக்க என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரதான கழகங்கள் 26 பங்கேற்ற  மேஜர் டி-20  லீக் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று (18) நடைபெற்றன.

கொழும்பு SSC  மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த SSC கழகம், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது

அந்த அணிக்காக க்ரிஷான் சன்ஜுல மாத்திரம் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

இந்த நிலையில் 147 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இராணுவ கிரிக்கெட் கழகம் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>> டில்ஷான்‌‌ ‌‌முனவீரவின்‌‌ ‌‌போராட்டம்‌‌ ‌‌வீண்‌:‌ ‌‌குருநாகல்‌‌ ‌‌இளையோருக்கு‌ ‌ த்ரில்‌‌ ‌‌வெற்றி‌

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஷான் ரன்திக 44 ஓட்டங்களையும், மத்திய வரிசையில் களமிறங்கிய ஹிமாஷ லியனகே பொறுமையுடன் விளையாடி 32 ஓட்டங்களையும் எடுத்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்

தொடரந்து பின்வரிசையில் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற, 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை 117 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணிக்கு பெற்றுக் கொள்ள முடிந்தது.

இறுதியில் 29 ஓட்டங்களினால் சரித் அசலங்க தலைமையிலான SSC கழகம் வெற்றயீட்டி சம்பியனாகத் தெரிவாகியது.

இறுதியாக 2016இல் நடைபெற்ற மேஜர் லீக் டி-20 தொடரின் அரை இறுதியில் இராணுவ கிரிக்கெட் கழகம், SSC கழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேஜர் T20 லீக்கில் சதத்தை தவறவிட்ட சதீர் சமரவிக்ரம

பந்துவீச்சில் கழகம் சார்பாக ஹிமேஷ் ராமநாயக்க 3 விக்கெட்டுக்களையும், கலன பெரேரா, தரிந்து ரத்னாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனிடையே, இம்முறை மேஜர் லீக் டி-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற SSC கழகத்துக்கு 5 மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இராணுவ கிரிக்கெட் கழகத்துக்கு 3 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக SSC கழகத்தின் க்ரிஷான் சன்ஜுல தெரிவாகியதுடன், தொடரின் நாயகனாக நுகெகொட கிரிக்கெட் கழகத்தின் ப்ரமுத் ஹெட்டிவத்த தெரிவானார்.

இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை நுகெகொட கிரிக்கெட் கழகத்தின் முதித்த லக்ஷான் பெற்றுக்கொள்ள, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை ராகம கிரிக்கெட் கழகத்தின் மித வேகப்பந்துவீச்சாளரான இஷhன் ஜயரட்ன பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் – 146/5 (20)க்ரிஷான் சன்ஜுல 71*, நிபுன் தனன்ஜய 27, நுவனிந்து பெர்னாண்டோ 27, ஹேஷான் ஹெட்டியாரச்சி 2/27

இராணுவ கிரிக்கெட் கழகம் – 117/10 (19.2)ஷான் ரன்திக 44, ஹிமாஷ லியனகே 32, ஹிமேஷ் ராமநாயக்க 3/23, கலன பெரேரா 2/15, தரிந்து ரத்னாயக்க 2/21

முடிவுSSC கழகம் 29 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<