மகளிர் டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் சம்பியனாகிய பங்களாதேஷ்

185
Getty Image

மகளிருக்கான டி-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை 70 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் மகளிர் அணி சம்பியனாகத் தெரிவாகியது. இதன்படி, மகளிருக்கான டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்று இம்மாத இறுதியில்

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 போட்டிக்கு முன்னோடியாக எட்டு நாடுகள்…

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சியின் உலக மகளிர் டி-20 போட்டிக்கு முன்னோடியாக 8 நாடுகள் பங்கேற்கின்ற தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தில் நடைபெற்றன.

இந்தத் தொடரில் நெதர்லாந்து, பப்புவா நியூகினியா, தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, நமிபியா, பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கேற்றன.

முன்னதாக நடைபெற்ற ஏ குழுவின் இறுதி லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி முதன்முறையாக தாய்லாந்து அணி டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்றது.

அதேபோல, பி குழுவில் பங்களாதேஷ் மகளிர் அணி அயர்லாந்தை வீழ்த்தி தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியும் டி-20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், ஏ குழுவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட தாய்லாந்து அணியும், பி குழுவில் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் அணியும் நேற்று (07) ஸ்கொட்லாந்தின் போர்ஹில்லில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோதின.

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் தகுதி

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் 19 வயதின்கீழ்ப்பட்டோருக்கான (இளையோர்) ஆசியக் கிண்ணத் தொடரின் குழு B…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சன்ஜிதா இஸ்லாமும், முர்ஷிதா காதுனும் களமிறங்கினர். சன்ஜிதா இஸ்லாம் பொறுப்புடன் விளையாடி அரைச் சதமடித்து அசத்தினார். அவர் 60 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பௌண்டரிகளுடன் 71 ஓட்டங்களையும், முர்ஷிதா காதுன் 33 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டழிந்தனர். ஏனைய வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில் பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை எடுத்தது. பந்துவீச்சில் தாய்லாந்து அணியின் நத்தயா பூத்தாச்சம் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து மகளிர் அணி களமிறங்கியது.

ஆரம்பம் முதல் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய தாய்லாந்து மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.

எனினும், பின்வரிசை வீராங்கனைகளின் பொறுமையான ஆட்டம் காரணமாக அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. தாய்லாந்து அணி சார்பில் ரதனபோர்ன் படுங்கிளேர்ட் அதிகபட்சமாக 15 ஓட்டங்களை எடுத்தார்.

T20 தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) T20…

இறுதியில் 70 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டிய பங்களாதேஷ் மகளிர் அணி ஐ.சி.சியின் உலக மகளிர் டி-20 தகுதிச் சுற்றுப் போட்டியின் சம்பியனாகத் தெரிவாகியது.

பங்களாதேஷ் மகளிர் அணி சார்பில் சைலா சர்மின் மற்றும் நாஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகியாக சன்ஜிதா இஸ்லாமும், தொடரின் நாயகியாக தாய்லாந்து அணியின் சானிதா சுத்திருஆங்கும் தெரிவாகினர்.

இதேவேளை, இந்தப் போட்டித் தொடரில் மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் பபுவா நியுகினியா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அயர்லாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது.

அத்துடன், ஐந்தாவது இடத்தை நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணியும், ஏழாவது இடத்தை நமிபியா அணியை வீழ்த்தி ஐக்கிய அமெரிக்கவும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<