அணித்தலைவர் ஹரி கேன் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் துனீசியாவுக்கு எதிரான 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் வேகம் காட்டிய இங்கிலாந்து அணிக்கு கேன் முதல் கோலை பெற்று முன்னிலை பெறச் செய்ததோடு, போட்டி முடியும் தருவாயில் (90’+1) அந்த அணிக்காக வெற்றி கோலையும் புகுத்தினார்.
உலகக் கிண்ணத்தின் G குழுவுக்கான இரண்டாவது போட்டியாகவே ரஷ்ய நேரப்படி திங்கட்கிழமை (18) இந்த போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த குழுவில் இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் பெல்ஜியத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
நைஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீனாவை முந்திய குரோஷியா
இளம் நைஜீரிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண…
போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் தலையால் முட்டி கோலை நோக்கி செலுத்திய பந்தை துனீசிய கோல்காப்பாளர் மூசா ஹசன் சிறப்பாக தடுத்தபோதும் திரும்பி வந்த பந்தை கேன் வலைக்குள் செலுத்தி இங்கிலாந்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
எனினும் 33ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து பெனால்டி எல்லைக்குள் இருந்த துனீசிய வீரர் பக்கர்தீன் பென் யூசுப்பை, கைல் வோக்கர் கீழே வீழ்த்தியதை அடுத்து நடுவரால் பெனால்டி உதை வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு துனீசிய அணி போட்டியை 1-1 என சமநிலை செய்தது.
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கோல் ஒன்றை போட கடுமையாக போராடியது. போட்டி சமநிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, டொட்டன்ஹாம் கழகத்தைச் சேர்ந்த ஹரி கேன் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
கோனர் கிக்கை அடுத்து ஹரி மகுயில் தலையால் முட்டிய பந்தை சரியான இடத்தில் இருந்து பெற்ற ஹரி கேன் அதனை தலையால் முட்டிய கோலாக மாற்றினார்.
துனீசிய அணி 1978இல் முதல் உலகக் கிண்ண வெற்றியை பெற்றதன் பின்னர் அந்த அணி ஆடிய கடந்த 12 உலகக் கிண்ண போட்டிகளிலும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்தை வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில்
பிஃபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில்…
உறுதியான வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த பெல்ஜியம்
சற்று தடுமாற்றத்துடன் முதல் பாதி ஆட்டத்தை ஆரம்பித்த பெல்ஜியம் இரண்டாவது பாதியில் வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பி பனாமா அணிக்கு எதிரான உலகக் கிண்ண முதல் போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. டெரிஸ் மார்டன் கோல் போடுவதை ஆரம்பித்ததோடு நட்சத்திர வீரர் ரொமலு லுகாகு இரட்டை கோலை புகுத்தினார்.
ரஷ்யாவின் சொச்சி நகரில் G குழுவுக்கான முதல் போட்டியாகவே பிஃபா தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் 55 ஆவது இடத்தில் உள்ள பனாமாவை திங்கட்கிழமை (18) எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பித்து முதல் நிமிடத்தில் லுகாகு எதிரணி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தபோது அது உயரப் பறந்து சென்றது. முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி சற்று தடுமாற்றம் கண்டதோடு பனாமா வீரர்கள் கோல் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
எனினும் 48 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கடைசியில் கோலொன்று கிடைத்தது. எதிரணி கோல் எல்லைக்குள் சற்று மந்தமாக பந்து பரிமாற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது டெரிஸ் மார்டன் அழகான கோல் ஒன்றை புகுத்தி அதிர்ச்சி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து போட்டியின் 69, 75 ஆவது நிமிடங்களில் மன்செஸ்டர் யுனைடெட் வீரர் லுகாகு அதிரடியாக இரண்டு கோல்களை போட்டு பெல்ஜியம் அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெல்ஜியம் அணி கடைசியாக போட்ட 19 கோல்களில் 11 கோல்கள் லுகாகு போட்ட கோல்களாகும்.
பந்தை சேதப்படுத்திய விடயத்தில் தினேஷ் சந்திமால் மீது குற்றத்தை நிரூபித்துள்ள ஐ.சி.சி.
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்…
பெல்ஜியம் அணி இந்த போட்டியில் எதிரணி கோலை நோக்கி 15 தடவைகள் தாக்குதல் நடத்தியபோது பனாமா அணியால் 6 தடவைகள் மாத்திரமே ஆக்கிரமிக்க முடிந்தது. குறிப்பாக பனாம அணியின் முற்சிகளை பெல்ஜியம் கோல்காப்பாளர் திபவுட் கோர்டொயிஸ் நிலையாக நின்று கோல்கம்பத்தை பாதுகாப்பதை காண முடிந்தது.
இதுவரை நடந்த போட்டிகளில் உலகக் கிண்ண வெற்றி வாய்ப்பு கொண்ட அணிகளில் பெல்ஜியம் மாத்திரமே தனது ஆரம்ப போட்டியில் உறுதியான வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளது. ஜெர்மனி தனது ஆரம்ப போட்டியில் தோல்வியை சந்தித்ததோடு பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் சமநிலை கண்டன.
முதல் முறை உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்றிருக்கும் பனாமா தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் இந்த போட்டியில் பனாமா அணியின் ஐந்து வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர். இது 2010 இற்கு பின்னர் உலகக் கிண்ண போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்ற அதிகமான மஞ்சள் அட்டைகளாகும்.
பெனால்டி உதை மூலம் தென் கொரியாவை வீழ்த்திய சுவிடன்
வீடியோ உதவி நடுவர் (VAR) முறையை பயன்படுத்தி சுவிடனுக்கு வழங்கப்பட்ட பெனால்டி மூலம் தென் கொரியாவுடனான உலகக் கிண்ண முதல் போட்டியை அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கிண்ண தொடரின் F குழுவுக்காக நிஸ்னி நொவ்கொரொட் அரங்கில் இன்று (18) நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் தொட்டு சுவீடன் அணி பெரும்பாலானநேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. எனினும் இரு அணிகளும்வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் பெறுவது கடினமாகஇருந்தது.
குறிப்பாக சுவிடனின் நீண்டகால நட்சத்திர வீரரான ஸ்லாடன் இப்ராஹிமோவிக் ஓய்வுபெற்றிருக்கும் நிலையில் இந்த போட்டியில் அவரது இழப்பு நன்றாக தெரிந்தது.
போட்டி முழுவதிலும் சுவிடன் கோல் இலக்கை நோக்கி 15 உதைகளை செய்தபோதும்அவை தடுக்கப்பட்டதோடு தென் கொரியாவால் நான்கு தடவைகள் மாத்திரமேஎதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முடிந்தது.
இந்நிலையில் 64 ஆவது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் மின் வூ பெனால்டிஎல்லைக்குள் வைத்து விக்டர் கிலேசனை கீழே வீழ்த்தினார். எனினும் நடுவர் உடன்விசில் ஊதவில்லை, சுவிடன் வீரர்கள் உடன் முறையிட்டதை அடுத்தே அந்த தவறுபரிசீலிக்கப்பட்டது.
ரொனால்டோவின் ஹெட்ரிக் கோலால் ஸ்பெயினுடனான போட்டியை சமன் செய்த போர்த்துக்கல்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹெட்ரிக்…
இதன்போது,வீடியோ உதவி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதை அடுத்தேசுவிடனுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அன்ட்ரியஸ் கினாக்விஸ்ட் சரியாகவும் மிக இலகுவாகவும் எதிரணிவலைக்குள் பந்தை செலுத்தி 65 ஆவது நிமிடத்தில் சுவிடன் அணிக்கு வெற்றி கோலைபெற்றுக் கொடுத்தார்.
உலகக் கிண்ணத்தின் வலுவாக குழுவில் இருக்கும் சுவிடனுக்கு இந்த வெற்றிமுக்கியமானதாகும். இந்த குழுவில் மெக்சிகோ அணி நடப்புச் சம்பியன் ஜெர்மனியைவீழ்த்தி புள்ளிகளை தட்டிக்கொண்டிருக்கும் சூழலில் ஜெர்மனி அடுத்த சுற்றுக்குமுன்னேற தன்னாலான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடும். இந்நிலையில் இந்தவெற்றியின் மூலம் சுவிடன் பெற்றிருக்கும் 3 புள்ளிகளும் அந்த அணிக்குநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக ஒன்பதாவது உலகக் கிண்ணத்தில் ஆடும் தென் கொரியாவுக்கு இந்ததோல்வி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2014 உலகக் கிண்ண போட்டியில் தென்கொரியாவால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.