குருநாகல், வெலகதர அரங்கில் நடைபெற்ற, 2018 வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின் திறந்த பிரிவில் இராணுவப்படை விளையாட்டுக் கழகமும் குருநாகல் மற்றும் களுத்துறை திருக்குடும்ப கன்னியர் மடமும் முறையே 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளிலும் வெற்றியீட்டின.
மலியதேவ பாலிக்கா வித்தியாலயம் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றியீட்டியதோடு கண்டி பெண்கள் உயர் பாடசாலை 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றியீட்டியது.
இம்முறை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கண்டியில்
நெஸ்லே லங்கா பிஎல்சி மற்றும் இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கம் என்பவை இணைந்து …
13 வயதிற்கு உட்பட்ட இறுதிப் போட்டியில் மலியதேவ பாலிக்கா வித்தியாலயம் குருநாகல், திருக்குடும்ப கன்னியர் மட அணியை 8-5 என்ற கணக்கில் தோற்கடித்ததோடு, குருநாகல் அணி 15 வயதுக்கு உட்பட் பிரிவில் கண்டி, ஹில்வூட் கல்லுரியை தோற்கடித்து சம்பியனானது.
கண்டி பெண்கள் உயர் பாடசாலை 13-10 என்ற கணக்கில் மலியதேவ பாலிக்கா வித்தியாலயத்தை வென்று 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றது. அதேபோன்று களுத்துறை, திருக்குடும்ப கன்னியர் மடம் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 17-11 என்ற அடிப்படையில் ஹில்வூட் கல்லூரியை வீழ்த்தி சம்பியனானது.
திறந்த பிரிவில் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இலங்கை பாடசாலைகள் அணியை 16-7 என்ற புள்ளிகளில் இலகு வெற்றியை பெற்று 2018 இல் மற்றுமொரு சம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க