பிரேசில் நெருக்கடி இன்றி அடுத்த சுற்றில் : நொக் அவுட்டில் சுவீடனுடன் மோதும் சுவிட்சர்லாந்து

445

செர்பியாவுடனான தீர்க்கமான போட்டியில் வெற்றிபெற்ற பிரேசில் அணி நெருக்கடி இன்றி பிஃபா உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருந்த செர்பிய அணி 2 கோல்களை விட்டுக்கொடுத்து முதல் சுற்றுடன் வெளியேறிது.

இதனிடையே, கொஸ்டாரிக்காவுடனான கடைசி குழு நிலைப் போட்டியை 2-2 என்ற கோல்களால் சமநிலை செய்த சுவிட்சர்லாந்து அணி நொக் அவுட் சுற்றில் சுவீடனுடன் ஆட தகுதி பெற்றுள்ளது. போட்டியின் கடைசி நேரத்தில் வினோதமான பெனால்டி ஒன்றின் மூலமே கொஸ்டாரிக்கா இந்த ஆட்டத்தை சமன் செய்தது.  

நடப்புச் சம்பியன் வெளியேற்றம்: மெக்சிகோவை வீழ்த்திய சுவீடன் அடுத்த சுற்றில்

தென் கொரியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல்…

பிரேசில் எதிர் செர்பியா

மொஸ்கோ, ஸ்பார்டக் அரங்கில் ரஷ்ய நேரப்படி புதன்கிழமை (27) நடைபெற்ற இந்த போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடனேயே பிரேசில் அணி களமிறங்கியது. போட்டி ஆரம்பித்த 2ஆவது நிமிடத்திலேயே நெய்மாரின் உதவியோடு கோடின்ஹோ அடித்த பந்து தடுக்கப்பட்டது.

கோடின்ஹோ விரைவாக பந்தை கடத்திச் செல்ல முயன்றபோது காப்ரியல் ஜேசுஸ் ஓப் சைட் பிடிபட்டார். போட்டியின் ஆரம்பத்தில் பிரேஸில் அணி செர்பிய கோல் கம்பத்தை தொடர்ந்து ஆக்கிரமித்தபோது செர்பியா நிலைகுலைந்தது.

இந்நிலையில் 36 ஆவது நிமிடத்தில் கோடின்ஹோ நீண்ட தூரத்தில் இருந்து போலின்ஹோவிடம் பந்தை கச்சிதமாக பரிமாற்றியபோது அதனை வேகமாக பெற்ற போலின்ஹோ முன்னால் வந்த எதிரணி கோல்காப்பளரின் தலைக்கு மேலால் பந்தை தாவி உதைத்து பிரேசில் அணிக்காக முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

2018 ஆம் ஆண்டு பிரேசில் ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு கோல்கள் பெற கோடின்ஹோ பங்களிப்பு செய்துள்ளார். இதில் அவர் நான்கு கோல்களை பெற்றிருப்பதோடு, இரு கோல்பெறும் உதவிகளை செய்துள்ளார்.    

முதல் பாதி: பிரேசில் 1 – 0 செர்பியா

செர்பிய அணி ஒப்பீட்டளவில் இந்த போட்டியில் மந்தமாகவே ஆடியது. அந்த அணி கோல் இலக்கை நோக்கி இரண்டு தடவைகள் மாத்திரமே பந்தை செலுத்தியது.

மறுபுறும் பிரேசில் அணி வெற்றியை உறுதி செய்யும் வகையில் 68ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தியது. நெய்மாரின் கோனர் கிக்கை கோல் கம்பத்தின் மிக அருகில் இருந்து தலையால் முட்டி தியாகோ சில்வா அதனை கோலாக மாற்றினார்.

இதன்மூலம் பிரேசில் அணி 1970 தொடக்கம் தொடர்ச்சியாக 13 உலகக் கிண்ண போட்டிகளில் குழுநிலையில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி தனது E குழுவில் மொத்தம் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்த பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறுவதற்கான நொக் அவுட் போட்டியில் F குழுவில் இரண்டாம் இடத்தை பெற்ற மெக்சிகோவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வரும் திங்கட்கிழமை (ஜூலை 02) சமராவில் நடைபெறவுள்ளது.

முழு நேரம்: பிரேசில் 2 – 0 செர்பியா

கோல் பெற்றவர்கள்

பிரேசில் போலின்ஹோ 36′, தியாகோ சில்வா 68′

சுவிட்சர்லாந்து எதிர் கொஸ்டாரிக்கா

E குழுவில் மொத்தம் 5 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்த சுவிட்சர்லாந்து அணி F குழுவில் முதலிடத்தில் இருக்கும் சுவீடனை காலிறுதிக்கு முந்திய சுற்றில் எதிர்கொள்ளும். இந்த இரு அணிகளும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜுலை 03) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு புள்ளியை பெறவேண்டிய நிலையிலேயே ரஷ்ய நேரப்படி புதனன்று (27) கொஸ்டாரிக்காவை எதிர்கொண்டது.

90ஆவது நிமிடத்தில் கோல் பெற்று செர்பியாவை வென்ற சுவிஸ்

செர்டான் ஷகிரி 90 ஆவது நிமிடத்தில் தனித்துப் பெற்ற…

போட்டியின் ஆரம்பத்தில் கொஸ்டாரிக்கா அணி ஆக்ரோஷமாக ஆடியபோதும் முதல் பாதியில் சுவிஸ் அணியால் முன்னிலை பெற முடிந்தது. ப்லேரிம் ட்சமெய்லி 31 ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: சுவிட்சர்லாந்து 1 – 0 கொஸ்டாரிக்கா

இரண்டாவது பாதியின் 10 நிமிடங்கள் கழித்து ஜேவேல் கெம்பலின் கோனர் கிக்கை தலையால் முட்டி கென்டல் வொஸ்டன் கொஸ்டாரிக்காவுக்காக பதில் கோல் பெற்றார்.

எனினும், அந்த அணியால் நீண்ட நேரம் போட்டியை சமநிலையில் வைத்திருக்க முடியவில்லை. 88ஆவது நிமிடத்தில் ஜோசிப் ட்ரிமிக் சுவிட்சர்லாந்தை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.  

இந்நிலையில் சுவிஸ் வீரர் டெனிஸ் சகரியா பெனால்டி பகுதிக்குள் தவறிழைக்க கொஸ்டாரிக்காவுக்கும் போட்டி முடியும் தருவாயில் பெனால்டி ஒன்று கிடைத்தது. எனினும் அந்த பெனால்டி ஓன் கோலாக மாறியது வினோதமானது.

93 ஆவது நிமிடத்தில் ப்ரியான் ருயிஸ் உதைத்த அந்த பெனால்டியின்போது பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியே வந்தது. ஆனால் பெனால்டியை தடுப்பதற்கு இடது பக்கம் பாய்ந்த சுவிஸ் கோல்காப்பாளர் யான் சொம்மரின் தலையில் அந்த பந்து பட்டு வலைக்குள் புகுந்தது.

கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் இரண்டு….

இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஓன் கோல் பெற்ற மூன்றாவது கோல்காப்பளராக சொம்மர் பதிவானார். இதற்கு முன் 2014இல் ஹொன்டுராஸின் நொயேல் வல்லடரஸ் மற்றும் 1998இல் ஸ்பெயினின் அன்டோனி சுபிர்ரடா ஆகியோரே சொந்த வலைக்குள் பந்தை புகுத்திய கோல்காப்பாளர்களாவர்.      

முழு நேரம்: சுவிட்சர்லாந்து 2 – 2 கொஸ்டாரிக்கா

கோல் பெற்றவர்கள்

சுவிட்சர்லாந்துப்லேரிம் ட்சமெய்லி 31′, ஜோசிப் ட்ரிமிக் 88′

கொஸ்டாரிக்கா கென்டல் வொஸ்டன் 56′, யான் சொம்மர் 90’103 (ஓன் கோல்)