தென் கொரியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறியது. தென் கொரிய அணி போட்டி முடியும் நேரத்திலேயே அதிர்ச்சி தரும் அந்த இரண்டு கோல்களையும் போட்டது.
அதேபோன்று, மெக்சிகோவுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சுவீடன் அணி உலகக் கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு வலுவான நிலையில் முன்னேறியது. மறுபுறம் சமகாலத்தில் நடைபெற்ற தென் கொரியாவுடனான போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்து வெளியேறியதால் மெக்சியோவால் இராண்டாவது அணியாக F குழுவில் இருந்து உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடிந்தது.
பிரான்ஸை சமன் செய்த டென்மார்க் அடுத்த சுற்றில்: பெருவுக்கு 40 ஆண்டுகளில் முதல் வெற்றி
பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான கோலற்ற மந்தமான ஆட்டம்….
ஜெர்மனி எதிர் தென் கொரியா
நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனி அல்லது மேற்கு ஜெர்மனி 1938 ஆம் ஆண்டு தொடக்கம் உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். இதன்படி பிஃபா உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி உலகக் கிண்ணத்தில் F குழுவில் கடைசி இடத்தை பெற்று வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் வென்ற தென் கொரியாவும் உலகக் கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி இழந்துள்ளது.
இதன்படி F குழுவில் இருந்து சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்துடனேயே ஜெர்மனி அணி கசானில் புதனன்று (27) தென் கொரியாவை எதிர்கொண்டது.
இதனால் ஜெர்மனி ஆக்ரோச ஆட்டத்தை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. ஆரம்பத்தில் பல கோல் வாய்ப்புகளையும் தவறவிட்டது.
குறிப்பாக லியோன் கொரெட்ஸ்கா கோலை நோக்கி தலையால் முட்டியபோது தென் கொரிய கோல்காப்பாளர் சோ ஹியோன் வூ ஒரு கையால் அதனை அபாரமாக தடுத்தார். இது ஜெர்மனி அணியின் சிறப்பான கோல் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்ட சந்தர்ப்பமாக அமைந்தது.
முதல் பாதி: தென் கொரியா 0 – 0 ஜெர்மனி
போட்டி முழுவதிலும் ஜெர்மனி வசமே பந்து அதிக நேரம் இருந்தது. இதன்படி ஜெர்மனி 258 தடவைகள் பந்தை பரிமாற்றியபோது தென் கொரிய 47 தடவைகள் மாத்திரமே கடத்திச் சென்றது. எனினும் ஜெர்மனியால் கோல் பெறுவது கடினமாகவே இருந்தது.
டிம் வெர்னர் உதைத்த பந்து கம்பத்துக்கு வெளியால் பறந்ததோடு, ஆறு யார்ட் தூரத்தில் இருந்து மெட்ஸ் ஹம்மல் தலையால் முட்டிய பந்தும் வலைக்குள் நுழையவில்லை.
இறுதி நிமிட கோலால் அடுத்த சுற்றுக்கு நுழைந்த ஆர்ஜன்டீனா
மார்கோஸ் ரோஜோ (Marcos ROJO) கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் நைஜீரியாவுக்கு…
இந்நிலையில் போட்டியின் 90 நிமிடங்களும் பூர்த்தியானபோது இரு அணிகளும் கோல் பெறாமல் சமநிலையிலேயே இருந்தது. ஆனால் வழங்கப்பட்ட மேலதிக நேரம் ஜெர்மனியின் கனவை தகர்ப்பதாக மாறியது.
92 ஆவது நிமிடத்தில் கோனர் கிக்கை அடுத்து ஜெர்மனி கோல் கம்கத்திற்கு மிக அருகில் இருந்த கிம் யொங்–க்வாம்மிடம் பந்து வர ஜெர்மனி வீரர்கள் செய்வதறியாது பார்த்திருக்கும்போது அவர் அதனை வலைக்குள் புகுத்தினார். எனினும் அது ஓப் சைட் கோல் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் அந்த கோல் அங்கீகரிக்கப்பட்டது.
இதன்மூலம் ஜெர்மனி அணியின் தோல்வி பெரும்பாலும் நிச்சயமான நிலையில் தென் கொரியா கடைசி நேரத்தில் மற்றொரு கோலையும் போட்டது.
ஜெர்மனி கோல் காப்பாளர் மனுவேல் நியுர் எதிரணி எல்லையில் இருந்தபோது பந்தை பெற்ற ஜு சி–ஜொங் அதனை முன்களத்தில் இருக்கும் சொன் ஹியுங்–மின்னிடம் கொடுத்தார். அவர் எதிர்க்க யாரும் இன்றி எதிரணி வலைக்குள் பந்தை செலுத்தினார்.
முழு நேரம்: தென் கொரியா 2 – 0 ஜெர்மனி
கோல் பெற்றவர்கள்
தென் கொரியா – கிம் யொங்–க்வாம் 90’+2, சொன் ஹியுங்–மின 90’+6
சுவீடன் எதிர் மெக்சிகோ
காலிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் சுவீடன் அணி E குழுவில் முதலிடத்தை பிடிக்கும் அணியுடன் மோதவுள்ளது. அது பெரும்பாலும் சுவிட்சர்லாந்தாக இருக்க வாய்ப்பு உள்ளது. மறுபுறம் மெக்சிகோ 16 அணிகள் சுற்றில் பெரும்பாலும் பிரேசிலையே எதிர்கொள்ளும். மெக்சிகோ 1994 இல் இருந்து ஒவ்வொரு உலகக் கிண்ணத்திலும் நொக் அவுட் சுற்றுடனேயே வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல் பெற முயற்சித்தபோதும் பந்து வலைக்குள் புகவில்லை.
முதல் பாதி: சுவீடன் 0 – 0 மெக்சிகோ
போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் விக்டர் கிளீசனிடம் இருந்து கிடைத்த பந்தை லுட்விங் அகஸ்டின்சன் கோலை நோக்கி உதைத்தபோது மெக்சிகோ கோல்காப்பாளர் கில்லர்மோ ஓசோவினால் தடுக்க முடியாமல் வலைக்குள் புகுந்தது.
தொடர்ந்து 62 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் மார்கஸ் பேர்கை, ஹெக்டர் மொரேனோ கீழே வீழ்த்தினார். இதனால் கிடைத்த பெனால்டியை அன்ட்ரீஸ் க்ரன்க்விஸ் கோலாக மாற்றினார். தொடர்ந்து 74 ஆவது நிமிடத்தில் கோலை நோக்கிச் செல்லும் பந்தை மெக்சிகோவின் எட்சன் அல்வரஸ் தடுக்க முயன்றபோது இடறியதால் தனது சொந்த வலைக்குள் பந்தை செலுத்தினார்.
இதன்மூலம் 1978 ஆம் ஆண்டு ஜெர்மனியிடம் 6-0 என தோற்ற பின்னர் மெக்சிகோ அணி உலகக் கிண்ணத்தில் இந்தப் போட்டியிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
முழு நேரம்: சுவீடன் 3 – 0 மெக்சிகோ
கோல் பெற்றவர்கள்
சுவீடன் – லுட்விங் அகஸ்டின்சன் 50′, அன்ட்ரீஸ் க்ரன்க்விஸ் 62′ (பெனால்டி), எட்சன் அல்வரஸ் 74′ (ஓன் கோல்)