இம்முறை உலகக் கிண்ணத்தின் வாழ்வா சாவா என்ற போட்டியில் போலந்து அணிக்கு எதிராக 3-0 என உறுதியான வெற்றியை பெற்ற கொலம்பிய அணி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும், இந்த போட்டியில் தோல்வி அடைந்த போலந்து அணி தனது இரண்டு போட்டிகளிலும் எந்த ஒரு புள்ளியையும் பெறாத நிலையில் ஆரம்ப சுற்றுடன் வெளியேறுகின்றது.
தனது ஆரம்பப் போட்டியில் கடந்த வாரம் ஜப்பானிடம் தோல்வியை சந்தித்த கொலம்பிய அணி தனது திறமை மிக்க வீரர்களான ரடமேல் பால்கோ, ஜேம்ஸ் ரொட்ரிகஸ் மற்றும் ஜுவான் குவாட்ராடோவின் உதவியோடு வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
இதன்மூலம் H குழுவில் 3 புள்ளிகளை பெற்றிருக்கும் கொலம்பிய அணி வரும் வியாழக்கிழமை (28) நடைபெறவிருக்கு செனகலுடனான தனது கடைசி குழுநிலை போட்டியில் வெற்றி பெற்றால் எந்த நிபந்தனையும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்யலாம்.
கடைசி நிமிட கோல் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்த ஜெர்மனி
போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட…
கசான் அரங்கில் ரஷ்ய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் ஜப்பானுடனான ஆடத்தில் உபாதை காரணமாக 30 நிமிடங்கள் மாத்திரம் ஆடிய ரொட்ரிகஸ் போலந்துக்கு எதிராக தீர்க்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
40 ஆவது நிமிடத்தில் ரொட்ரிகஸ் அடித்த லாவகமான கோனர் கிக்கை யெர்ரி மினா தலையால் முட்டி கோலாக மாற்றினார். எனவே, முதல் பாதி ஆட்டம் கொலம்பிய அணியின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.
முதல் பாதி: கொலம்பியா 1 – 0 போலந்து
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கொலம்பிய அணியின் கையே ஓங்கியிருந்தது. 70ஆவது நிமிடத்தில் மைதானத்தின் நடுவில் இருந்து ஜுவான் குவின்டேரோ தாழ்வாக பரிமாற்றிய பந்தை பெற்ற ரடமெல் பல்கோ அதிக கட்டுப்பாடுடன் பந்தை வலைக்குள் செலுத்தி கொலம்பிய அணியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.
மேலும், ஐந்து நிமிடங்கள் கழித்து முன்னாள் செல்சி வீரர் ஜுவான் குவாட்ராடோ கொலம்பிய அணிக்காக மூன்றாவது கோலை புகுத்தினார்.
போலந்து அணி வசம் உலகத் தரம் வாய்ந்த முன்கள வீரரான ரொபர்ட் லெவன்டோஸ்கி இருந்தபோதும் அவரால் தனது அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை. இதன்மூலம் 2018 உலகக் கிண்ணத்தில் முதல் ஐரோப்பிய அணியாக போலந்து ஆரம்ப சுற்றுடன் வெளியேறியுள்ளது.
முழு நேரம்: கொலம்பிய 3 – 0 போலந்து
கோல் பெற்றவர்கள்
கொலம்பியா – யெர்ரி மினா 40′, ரடமெல் பல்கோ 70, ஜுவான் குவாட்ராடோ 75′
செனகலின் கோல்களுக்கு பதில்கொடுத்து போட்டியை சமன் செய்த ஜப்பான்
ஜப்பான்-செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை பெற்றதை அடுத்து இரு அணிகளும் உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேற உறுதியான வாய்ப்பை பெற்றுள்ளன.
H குழுவில் ஜப்பான் அணி தனது ஆரம்ப போட்டியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்திலும் செனகல் தனது முதல் போட்டியில் போலந்தை 2-1 என்ற கோல் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற நிலையில் இந்த இரு அணிகளும் தற்போது சரிசமமாக 4 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
கடைசி நிமிட கோல் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்த ஜெர்மனி
போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட…
எகடரின்பேர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே செனகல் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முயன்றது. இதனால் 3 மற்றும் 5 ஆவது நிமிடங்களில் செனகலுக்கு கோனர் கிக் வாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில் வலதுபுறத்தில் இருந்து மூசா வகு குறுக்காக உதைத்த பந்தை கென்கி ஹரகுச்சி தலையால் முட்டி தடுக்க முயன்றபோது அது யூசுப் சாபாலியிடம் செல்ல அதனை அவர் ஜப்பான் வலையை நோக்கி நேராக உதைத்தார். அந்த பந்தை ஜப்பான் கோல்காப்பாளர் ஈஜி கவஷிமா தடுத்தபோதும் அது சாடியோ மானேவிடம் சென்றபோது அவர் அதனை கோலாக மாற்றினார். இதன்மூலம் செனகல் அணி 11 ஆவது நிமிடத்திலேயே போட்டியில் முன்னிலை பெற்றது.
எனினும் ஜப்பான் அணி 34 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. பெனால்டி எல்லையின் இடதுபுறத்தில் வைத்து பந்தை பெற்ற டகாசி இனுயி 15 யார்ட் தூரத்தில் இருந்து அபார கோல் ஒன்றை பெற்றார்.
முதல் பாதி: செனகல் 1 – 1 ஜப்பான்
இரண்டாவது பாதி ஆட்டத்தை செனகல் அணி வேகமாக ஆரம்பித்தது. செனகல் வீரர்கள் நேர்த்தியாக பரிமாற்றிய பந்தை பெற்ற 19 வயது மூசா வகு அதனை வலைக்குள் புகுத்தி 71 ஆவது நிமிடத்தில் செனகல் அணியை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.
கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் இரண்டு..
இம்முறையும் செனகல் அணியால் நிண்ட நேரம் முன்னிலை பெற முடியவில்லை. 78 ஆவது நிமிடத்தில் ஜப்பானின் கெய்சுகே ஹொன்டா செனகல் கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்த பந்து கோல்காப்பாளர் கதிம் ந்டயேவினால் தடுக்க முடியாமல் வலைக்குள் சென்றது.
ஜப்பான் அணி கடைசியாக பெற்ற எட்டு உலகக் கிண்ண கோல்களில் ஆறு கோல்களுக்கு ஹொன்டா பங்களிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: செனகல் 2 – 2 ஜப்பான்
கோல் பெற்றவர்கள்
செனகல் –சாடியோமானே 11′, மூசாவகு 71′
ஜப்பான் – டகாசி இனுயி 34′, கெய்சுகே ஹொன்டா 78′
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து சாதனையுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஹரி கேனின் ஹட்ரிக் கோலுடன் பனாமாவுக்கு எதிராக 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி 2010 ஆம் அண்டுக்குப் பின்னர் பிஃபா உலகக் கிண்ணத்தின் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இங்கிலாந்து அணி பெற்ற ஆறு கோல்களும் உலகக் கிண்ண போட்டி ஒன்றில் அந்த அணி பெற்ற மிக அதிக கோல் என சாதனையாகப் பதிவாகியுள்ளது.
இந்த வெற்றியுடன் G குழுவில் தலா 6 புள்ளிகளை பெற்றிருக்கும் இங்கிலாந்துடன் பெல்ஜியம் அணியும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வாகி இருப்பதோடு டியூனிசியா மற்றும் பனாமா அணிகள் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறுகின்றன. இந்நிலையில் வரும் வியாழக்கிழமை (28) இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் தமது குழுவில் முதலிடத்தை பிடிப்பதற்காக போட்டியிடவுள்ளன.
நிஸ்னி நொவ்கொரோட் அரங்கில் இன்று (24) நடைபெற்ற போட்டியில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற கத்துக்குட்டி பனாமாவுக்கு இங்கிலாந்து அணி எழுந்திருக்க முடியாமல் ஆரம்பத்திலேயே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் பாதி ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி 5 கோல்களை புகுத்த பனாமா அணியின் பின்கள வரிசை முழுமையாக தோல்வி கண்டது. 8 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன்ஸ் தலையால் முட்டி கோல் போட்டதோடு, 22 ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் கேன் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பந்தை வலைக்குள் செலுத்தினார்.
இத்தோடு நிற்காத இங்கிலாந்து அணி 36 ஆவது நிமிடத்தில் ஜெஸ்ஸி லிகார்ட் மற்றும் 40 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோனைக் கொண்டு மேலும் இரு கோல்களை போட்டதோடு முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ஹரி கேன் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பெற்றார்.
முதல் பாதி – இங்கிலாந்து 5 – 0 பனாமா
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் கோல் புகுத்தும் வேகம் தொடரவில்லை என்றபோதும் 62 ஆவது நிமிடத்தில் ஹரி கேன் மற்றொரு கோலை புகுத்தி தனது ஹட்ரிக் கோலை பதிவு செய்தார்.
1966இல் ஜெர்மனிக்கு எதிராக ஜெப் ஹர்ஸ்ட் மற்றும் 1986 இல் போலந்துக்கு எதிராக கரி லின்கர் ஹட்ரிக் கோல் பெற்ற பின் உலகக் கிண்ணத்தில் ஹட்ரிக் கோல் பெறும் மூன்றாவது இங்கிலாந்து வீரர் கேன் ஆவார்.
இந்த கோல்கள் மூலம் 2018 உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்றவர் வரிசையில் கேன் ஐந்து கோல்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டியில் பனாமா அணிக்கு மகிழ்ச்சியுறும் தருணம் 78ஆவது நிமிடத்தில் ஏற்பட்டது. ரிகார்டோ அவிலா பரிமாற்றிய பந்தை பனாமா அணித்தலைவர் பிலிப்பே பலோய் பாய்ந்து தனது வலது காலால் உதைத்து கோல் பெற்றார். எனவே, பனாமா அணி உலகக் கிண்ணத்தில் பெறும் முதல் கோலாக இது அமைந்தது.
முழு நேரம் – இங்கிலாந்து 6 – 1 பனாமா
கோல்பெற்றவர்கள்
இங்கிலாந்து –ஜோன்ஸ்டோன்ஸ் 8′, 40′, ஹரிகேன் 22′ (பெனால்டி), 45’+1 (பெனாsல்டி), 62′, ஜெஸ்ஸிலிகார்ட் 36′
பனாமா –ரிகார்டோஅவிலா 78′
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<