இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடர் சனிக்கிழமை (24) ஆரம்பமானது. பிரீமியர் லீக் A மற்றும் B நிலை போட்டிகள் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முடிவுற்ற நிலையில் மொத்தம் 23 கழகங்களும் ஒரே கிண்ணத்திற்காக T20 தொடரில் ஆடுகின்றன.
இதன்படி ஆறு அணிகள் கொண்ட மூன்று குழுக்கள் மற்றும் ஐந்து அணிகள் கொண்ட ஒரு குழுவாக ஆரம்ப சுற்றில் அனைத்து அணிகளும் மோதுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் தொடரின் முதல் நாளில் இடம்பெற்ற 11 போட்டிகளின் விபரம் வருமாறு,
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பிரீமியர் லீக் A நிலை சம்பியனான சிலாபம் மேரியன்ஸ் அணி, பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 7 விக்கெட்டுகளால் இலகுவான வென்றது.
நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை
2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட
இசுரு உதான தலைமையில் களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 121 ஓட்டங்களுக்கே சுருண்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரோஹித் தாமோதரன் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை விளாச சிலாபம் மேரியன்ஸ் அணி 14.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியின் சுருக்கம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 121 (19.4) – சிறிமன்த விஜேரத்ன 22, சமித் துஷந்த 18, நிமேஷ் விமுக்தி 18, ஷெஹான் ஜயசூரிய 3/24, அசித பெர்னாண்டோ 3/25
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 125/3 (14.4) – ரோஹித் தாமோதரன் 56*, திக்ஷில டி சில்வா 36, தனுக்க பத்திரன 1/25,
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
SSC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
அதீஷ திலஞ்சனவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் SSC அணியை 137 ஓட்டங்களுக்கு சுருட்டிய சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் போராடி வெற்றி பெற்றது.
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட SSC அணிக்காக திமுத் கருணாரத்ன 35 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசினார். அதீஷ திலஞ்சன 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
சோனகர் அணிக்காக துடுப்பாட்டத்திலும் சோபித்த அதீஷ திலஞ்சன 35 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். SSC அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க 4 ஓவர்களுக்கும் 10 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அது வெற்றிக்கு போதுமாக இருக்கவில்லை.
போட்டியின் சுருக்கம்
SSC – 137 (19.1) – திமுத் கருணாரத்ன 48, அதீஷ திலஞ்சன 3/27
சோனகர் விளையாட்டுக் கழகம் – 138/7 (19.5) – அதீஷ திலஞ்சன 45, திலக்ஷ சுமன்சிறி 26, சச்சித்ர சேனநாயக்க 3/10
முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
ஏனைய போட்டிகளின் சுருக்கம்…
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
லங்கன் கிரிக்கெட் கழகம் – 135/7 (20) – தினுஷ்க மாலன் 35, சானக்க ருவன்சிறி 30, கீத் குமார 28, சுரங்க லக்மால் 2/26, ஜீவன் மெண்டிஸ் 2/23
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 138/3 (15.3) – தனஞ்சய டி சில்வா 42, கித்ருவன் விதானகே 27, நவீன் கவிகார 2/25
முடிவு – தமிழ் யூனியன் 7 விக்கெட்டுகளால் வெற்றி
பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 74 (16.1) – காஷிப் நவித் 14, கசுன் ராஜித்த 2/18, ரமேஷ் மெண்டிஸ் 2/13, லஹிரு பெர்னாண்டோ 2/12, லஹிரு சமரகோன் 2/05
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 78/0 (8.2) – நிபுன் கருணாநாயக்க 47*, அதீஷ நாணயக்கர 26*
முடிவு – ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி
சுதந்திர கிண்ண தொடரில் இருந்தும் விலகும் அசேல குணரத்ன
அண்மையில் நிறைவுற்ற பங்களாதேஷ் நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை அதிரடித் துடுப்பாட்ட வீரரான
காலி கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்
காலி கிரிக்கெட் கழகம் – 144 (19.4) – ஹர்ஷ ராஜபக்ஷ 48, ரவிந்து செம்புகுட்டிகே 39, ரனேஷ் பெரேரா 5/20, ஹர்ஷ விமர்ஷன 2/26
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 145/6 (17.5) – யொஹான் டி சில்வா 50, சரித் ஜயம்பதி 32, சதுர லக்ஷான் 2/21, கயான் சிறிசோம 2/30
முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
NCC எதிர் களுத்துறை நகர கழகம்
NCC – 120/9 (20) – அஞ்செலோ பேரேரா 46, பர்வீஸ் மஹ்ரூப் 31, எரங்க ரத்னாயக்க 5/20
களுத்துறை நகர கழகம் – 104 (18.4) – சமீர சந்தமால் 29, பசிந்து மதுஷான் 26, சதுரங்க டி சில்வா 3/24, லசித் மாலிங்க 2/30, லஹிரு குமார 2/12
முடிவு – NCC அணி 16 ஓட்டங்களால் வெற்றி
இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
இராணுவ கிரிக்கெட் கழகம் – 218 (19.5) – அஷான் ரன்திக்க 72, ஜனித் சில்வா 43, லியோ பிரான்சிஸ்கோ 25, செஹான் வீரசிங்க 4/33, உமேக சதுரங்க 2/39
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 116 (16.3) – பிரசன்சன ஜயமான்ன 27, ஜனித் சில்வா 4/22
முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 102 ஓட்டங்களால் வெற்றி
BRC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
BRC – 182/6 (20) – ருமெஷ் புத்திக்க 57, திலகரத்ன சம்பத் 46, பிரவின்த விஜேசூரிய 25, இஷான் ஜயரத்ன 2/29, ஜனித் லியனகே 2/37
ராகம கிரிக்கெட் கழகம் – 186/6 (19.1) – லஹிரு மிலந்த 47, சமீர டி சொய்சா 45*, இஷான் ஜயரத்ன 38*, திலகரத்ன சம்பத் 3/22
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC)
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 148 (20) – ருவின்து குணசேகர 56, அஷேன் பண்டார 28, ஹர்ஷ குரே 19, சச்சித் பதிரண 2/25, லக்ஷான் சந்தகன் 2/28
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 149/4 (18.4) – டில்ஷான் முனவீர 75, குசல் மெண்டிஸ் 21, அண்டி சொலமன்ஸ் 2/22
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 198/3 (20) – அவிஷ்க பெர்னாண்டோ 74, சதீர சமரவிக்ரம 58, ரொஸ்கோ தடில் 2/27
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 141 (19.4) – உதயவன்ச பராக்ரம 20, சச்சிக்க உதார 20, பிரபாத் ஜயசூரிய 4/17, மொஹமட் அலி 2/28
முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 57 ஓட்டங்களால் வெற்றி
பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 163/6 (20) – சஞ்சய சதுரங்க 59*, டில்ஹான் குரே 49, ஷதிக் நிமல்ஷ 2/40, நுவன் சம்பத் 2/25
கடற்படை விளையாட்டுக் கழகம் 100 (14.5) – நுவன் சம்பத் 32, புத்திக ஹசரங்க 23, சவித் பிரியான் 2/16, சஞ்சய சதுரங்க 2/17
முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 63 ஓட்டங்களால் வெற்றி