UEFA யின் 2016/17 ஆம் பருவகாலத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இம்முறையும் பிரான்சின் மொனக்கோ நகரில் நடைபெற்றது. இதில் இவ்வருடத்திற்கான ஜரோப்பாவின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த முன்கள வீரர் ஆகியோருக்கான இரு விருதுகளையும் பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார்.
நெய்மர் மீது வழக்குத் தொடுத்த பார்சிலோனாவுக்கு எதிராக முறைப்பாடு
அண்மையில் பிரான்ஸின் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்கு மிகப் பெரிய..
ஜரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union Of Europe Football Association – UEFA) ஒவ்வொரு வருடமும் நடாத்தும் UEFA யின் விருது வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இம்முறை நிகழ்வில் பல தனி நபர் விருதுகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
UEFA Champions League மற்றும் UEFA Europa League ஆகிய சுற்றுப் போட்டிகளில் பங்கு கொள்ளும் கழகங்களின் பயிற்றுவிப்பாளர்களாலும், ஜரோப்பிய நாடுகளின் விளையாட்டு ஊடகங்களின் குழுவால் தெரிவு செய்யப்பபட்ட 55 ஊடகவியலாளர்கள் மற்றும் UEFA கழகங்களின் உறுப்பினர்களாலுமே இவ்விருதுகளுக்கான வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். எனினும், பயிற்றுவிப்பாளர்களுக்கு தமது சொந்த அணி வீரர்களுக்கு வாக்களிக்க முடியாது என்பது இதில் உள்ள ஒரு முக்கிய நிபந்தனையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
2016/17 இற்கான UEFA யின் விருது வழங்கும் விழாவிற்கான செயற்பாடுகளானது 2017/18 இற்கான UEFA Champions League குழு நிலை சுற்றுப் போட்டிக்கான அணிகள் தெரிவுடன் ஆரம்பமானது.
மொனோக்கோ நகரில் ஆகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் பல கால்பந்து பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். 2016/17ஆம் பருவகாலத்திற்கான ஜரோப்பாவின் சிறந்த வீரர் என்ற விருதிற்காக ரியல் மெட்ரிட் நட்சத்திரம் ரொனால்டோ, பார்சிலோனா நட்சத்திரம் லியொனல் மெஸ்ஸி மற்றும் ஜுவன்டஸ் தலைவரும் அவ்வணியின் கோல் காப்பாளருமான கியான்லிகி பஃப்பன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுல் 32 வயதான ரொனால்டோ 482 புள்ளிகளைப் பெற்று 2016/17 இற்கான சிறந்த ஜரோப்பிய கால்பந்து வீரருக்கான விருதை தொடர்ந்து முன்றாவது (2014, 2016, 2017) முறையாக வென்றார். இவ்விருதானது ஒரு வீரர் ஓரு பருவகாலத்தில் தனது கழகத்திற்காகவும் நாட்டிற்காகவும் வெற்றிகளை பெறுவதற்கு வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே வழங்கப்படுகின்றன.
ஜரோப்பாவின் சிறந்த வீரருக்கான தெரிவில் லியொனல் மெஸ்ஸி 141 வாக்குகளையும், பஃப்பன் 109 வாக்குகளையுமே பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் விருதை வென்றதன் பின்னர் ரொனால்டோ, தனக்கு வழங்கப்பட்ட விருதின் மூலம் பெருமிதமடைவதாகவும் இவ்விருதை வெல்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை
ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017 /18 ஆம்…
இவ்வருடம் முதல் UEFA மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் விருதுகளான சிறந்த முன்கள வீரர், சிறந்த மத்தியகள வீரர், சிறந்த பின்கள வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
கடந்த பருவகாலத்தின் சிறந்த முன் கள வீரராகவும் ரொனால்டோவே தெரிவு செய்யப்பட்டார். இவ்விருதிற்காக லியொனல் மெஸ்ஸி மற்றும் ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் டிய்பாலா ஆகியோர் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மொத்தமாக 37 கோல்களை தனது பெயரில் பதிவு செய்ததற்காகவே இவ்விருது ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த மத்திய கள வீரர்களாக ரியல் மெட்ரிட் அணியின் மத்திய கள வீரர்களான கெஸமீரீயொ, டோனி குருஸ் மற்றும் லுகா மொட்றிக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இவர்களுல் குரொடிய நாட்டு வீரர் லுகா மொட்றிக் 2016/17 இன் சிறந்த மத்திய கள வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் சிறந்த பின்கள வீரராக ரியல் மெட்ரிட் கழக பின்கள வீரரும் அவ்வணியின் தலைவருமான ஸர்ஜியோ ராமோஸ் தெரிவானார். இவருடன் இவ்விருதிற்காக ரியல் மெட்ரிட் அணியின் மார்சலோ மற்றும் இவ்வருடம் முதல் எ.ஸி மிலான் அணிக்காக விளையாடி வரும் லியர்னார்டோ பனுச்சீ ஆகிய இருவரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
சிறந்த கோல் காப்பாளருக்கான தேர்வில் பயர்ன் முனீச் கழகத்தின் மெனுவல் நெய்யர் மற்றும் அட்லடிகொ மட்ரிட் கழகத்தின் ஜன் ஒப்லக் ஆகியோரை விட அதிகமான வாக்குகளைப் பெற்று ஜுவன்டஸ் கழக கோல் காப்பாளரும் இவ்வணியின் தலைவருமான கியான்லிகி பஃப்பன் தெரிவானார்.
இத்தனி நபர் விருதுகள் அனைத்தும், அனைத்து சுற்றுப் போட்டிகளையும் உள்ளடக்கிய விருதாகவே வழங்கப்படுகின்றன. 2016/17 ஆம் வருடத்திற்கான UEFA யினால் வழங்கப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றோர் பட்டியலை எடுத்து நோக்கினால் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழக வீரர்களின் பெயர்கள் சற்று அதிகமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.