தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

134

இலங்கை மெய்வல்லுநர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் அடுத்த மாதம் (மே) 23இ 24இ 25இ 26இ 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

16, 18, 20, 23 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு மெய்வல்லுநர் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

2000ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்கும் உட் பட்ட காலத்தில் பிறந்தவர்கள் 16 வயதுக்குட்பட்ட பிரிவிலும் 1998 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் 18 வயதுக்குட்பட்ட பிரிவிலும் போட்டியிடலாம்.

1996 க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் 20 வயதுக்குட்பட்ட பிரிவிலும் 1993 க்கும் 1994 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பிறந்தவர்கள் 23 வயதுக்குட்பட்ட பிரிவிலும் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.

இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவங்களை கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.