பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகின்றது

227

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்­ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன அதிகாரி ஒரு­வரின் தக­வலின் பிர­காரம் மூன்று வகை கிரிக்கெட் போட்­டி­க­ளிலும்  இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்த்­தா­ட­வுள்­ளது.

மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகள்இ 5 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள்இ இரண்டு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் என்­ப­வற்றில் இரண்டு நாடு­களும் விளை­யா­ட­வுள்­ளன.

ஜூன் மாத முற்­ப­கு­தியில் இங்கு வருகை தர­வுள்ள பாகிஸ்தான் அணி முதலில் மூன்று நாள் பயிற்சிப் போட்­டியில் விளையாடும் இந்தப் போட்டி கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் ஜூன் 17முதல் 21 வரை நடைபெறவுள்­ளது.

இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் ஜூன் 25 முதல் 29வரையும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாசவிளையாட்டரங்கில் ஜூலை 3 முதல் 8வரையும் நடை­பெ­ற­வுள்­ளது.

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் தம்­பு­ளையில் ஜூலை 11ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இரண்­டா­வது போட்டி பள்­ளே­க­லை­யிலும் (ஜூலை 15)இ மூன்றாவதுஇ நான்­கா­வது போட்­டிகள் கொழும்­பிலும் (ஜூலை 19இ 22)இ ஐந்­தா­வது போட்டி ஹம்­பாந்­தோட்­டை­யிலும் (ஜூலை 26) நடைபெற­வுள்­ளன.

இதனைத் தொடர்ந்து ஜூலை 30இ ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச இருபது 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.