சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ. சி. சி) அண்மைய செயல் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்இ தமக்கு பங்கிடப்படவேண்டிய நிதியை நிறுத்தி வைத்தமை நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற ஆளுநர் சபைக் கூட்டத்தில் திடீரென எடுக்கப்பட்ட முடிவு ஒரு ‘தவறான வழிநடத்தல்’ எனவும் சபை அதன் சொந்த கருத்தை வெளியிட்டுள்ளதெனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தொடர்ச்சியாகஇ குறிப்பாக இடைக்கால நிர்வாக சபை குறித்து அறிவிக்கப்பட்ட நிலையிலும் பேரவை இத்தகைய முடிவுகளை எடுத்திருப்பது அதிர்ச்சி தருகின்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் றிச்சர்ட்சனுக்கு முகவரியிடப்பட்டுள்ள இக் கடிதத்தின் பிரதிகள்இ பேரவையின் தவிசாளர் என். ஸ்ரீனிவாசன்இ ஆளுநர் சபை உறுப்பினர்கள்இ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.