பசுபிக் ஓஷானியாவிடம் இலங்கை தோல்வி

206

சம்­மே­ளனக் கிண்­ணத்­திற்­கான 2 ஆம் பிரி­வு ஆசிய–பசுபிக் டென்னிஸ் தொடரின் டி குழு போட்டி ஒன்றில் இலங்கை மகளிர் அணி 0–3 என்ற ஆட்டக் கணக்கில் பசுபிக் ஓஷா­னி­யா­விடம் தோல் வியடைந்­தது.

இந்­தி­யாவின் ஹைத­ராபாத் உள்­ளக கடின தரை அரங்கில் மகளிர் டென்னிஸ் போட்­டிகள் நடை­பெற்­று­  வ­ரு­கின்­றன.

முத­லா­வது ஒற்­றையர் போட்­டியில் இலங்­கையின் 16 வயது வீராங்­கனை மெதிரா சம­ர­சிங்­கவை எதிர்த்­தா­டிய பசுபிக் ஓஷா­னி­யாவின் ஆபிகெய்ல் தேரே அப்­பிசா 6–0இ 6–3 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 நேர் செட்­களில் வெற்றி­ கொண்டார்.

இரண்­டா­வது ஒற்­றையர் ஆட்­டத்தில் திசுரி மொல்­லி­கொ­ட­விடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஸ்டெஃவி கரூ­ததர்ஸ் 6–2இ 6–7இ 6–1 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2–1 என்ற செட்­க­ணக்கில் வெற்­றி­கொண்டார்.

இரட்­டையர் ஆட்­டத்தில் அம்­ரிதா முத்­தை­யாவும் மெதிரா சம­ர­சிங்­கவும் ஜோடி சேர்ந்து விளை­யா­டினர்.

இவர்­களை எதிர்த்­தா­டிய பசுபிக் ஓஷா­னி­யாவின் ஸ்டெஃவி கரூ­ததர்ஸ்இ பிரிட்­டானி டீய் ஆகிய இரு­வரும் 6–3இ 3–6இ 6–3 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2–1 என்ற செட் கணக்கில் வெற்­றி­கொண்டு பசுபிக் ஓஷா­னி­யாவின் வெற்­றியை உறுதி செய்­தனர்.

இலங்கை மகளிர் டென்னிஸ் அணியில் நெத்மி ஹிமாஷி வடுகே நான்­கா­வது வீராங்­க­னை­யாக இடம்­பெ­று­கின்றார்.

விளை­யா­டாத அணித் தலை­வி­யாக ஷாலினி டி சில்வா செயற்­ப­டு­கின்றார்.

இலங்கை அணி இக்குழுவுக்கான அடுத்த போட்டியில் இந்தோனேஷியாவை நேற்று எதிர்த்தாடவிருந்தது