விழிப்புலனற்றோர் கிரிக்கெட் போட்டி

171

வடமாகாண விழிப்புலனற்றோர் சங்க கிரிக்கெட் அணிக்கும் கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர் சங்க கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாண அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

ஒலி எழுப்பும் பந்து இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது. 11 பேரைக் கொண்ட அணியில்இ பார்வையற்றவர்கள் 3 பிரிவினராகப் பங்குபற்றுவார்கள். முற்றாக கண்பார்வையிழந்த 4 பேர் பி 1 என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 1 ஓட்டம் எடுத்தால் அது 2 ஓட்டங்களாக கொள்ளப்படும். கிட்ட பார்வையுடைய 3 பேர்இ பி-2 என்று அழைக்கப்படுவதுடன்இ 40 வீதமான பார்வையுடையவர்கள் 4 பேர்இ பி – 3 எனவும் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெறும் ஓட்டங்கள் சாதாரண ஓட்டங்களாகவே கொள்ளப்படும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு அணியும் வீரர்களைக் கொண்டமைந்து காணப்படும். இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும்; இழந்துஇ 113 ஓட்டங்களைப் பெற்றது.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட மாகாண அணிஇ 11.3 ஓவர்களில் 53 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு பிரதம அதிதியாக வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் கலந்துகொண்டார்.