இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அந்த அணிக்கு சிவப்பு பெட்டி பாதுகாப்புடன் சிறந்த வரவேற்பு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுக்ககிடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் மியான் ரியாஸ் ஹுசைன் கூறுகையில்இ இலங்கை அணிக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது.
இருப்பினும் இலங்கை தனது முதுகை திருப்பிக் கொள்ளவில்லை. நாங்கள் அவர்களின் சகோதர மரியாதையை மதிக்கிறோம்.
தற்போது கடவுளின் கருணையால் எங்களிடம் சிறந்த ராணுவ பாதுகாப்பு உள்ளது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வரவுள்ளது.
இது சர்வதேச நாடுகள்இ தற்போதைய அரசாங்கத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்