யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கிச் சங்கத்தினால் யாழ். மாவட்ட ஹொக்கி அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டித் தொடரின் ஆட்டமொன்றில் ஜொனியன்ஸ் சிவப்பு அணி வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆட்டத்தில் தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இரு அணிகளும் போட்டி ஆரம்பமாகியதும் கோல்கள் பெற கடுமையான முயற்சியை மேற்கொண்ட போதிலும் சாத்தியப்படவில்லை. ஆனாலும்இ இறுதி நிமிடத்தில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஆட்டமாக காணப்பட்ட போதிலும் மீண்டும் மைதானத்தில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கைகள் மேலோங்கி காணப்பட்டது. இந் நிலையில் மேலும் இரண்டு கோல்களை ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் பெற்ற நிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி பெற்று இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றது.
Joenians Red SC beat Thellipalai Unions SC to 3-nil in the Jaffna district hockey tourney recently. the tournament was organized by Jaffna District Hockey Association at lemon 1- nil