சிங்கர் கிண்ணத்தை புனித பெனடிக்ற் சுவீகரித்தது (2)

179
இலங்கை பாடசா­லைகள் கிரிக்கெட் சங்­கத்­தினால் நடத்­தப்­படும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சா­லை அணி­க­ளுக்கு இடை­யி­லான முதலாம் பிரிவு சிங்கர் கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் கொட்­டாஞ்­சேனை புனித பெனடிக்ற் கல்­லூரி சம்­பி­ய­னா­னது
 
 
கெத்­தா­ராம ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் நேற்று பிற்­பகல் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் கல்­லூ­ரியை 22 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்டு புனித பெனடிக்ற் சம்­பியன் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.
 
துலின டில்ஷான்இ மஹேல ஜயலத் ஆகி­யோரின் திற­மை­யான துடுப்­பாட்­டங்­களும் கீதால் பெர்­னாண்­டோவின் துல்­லி­யமான பந்­து­ வீச்சும் புனித பெனடிக்ற் முதல் தட­வை­யாக பாட­சாலை இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­ய­னாக வைத்­தன.
 
இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த புனித பெனடிக்ற் அணிஇ 19.3 ஓவர்­களில் சகல விக்கெட்­க­ளை யும் இழந்து 114 ஓட்­டங்­களைப் பெற்­றது.
 
துடுப்­பாட்­டத்தில் துலின டில்ஷான் 45 ஓட்­டங்­க­ளையும் மஹேல ஜயலத் 24 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.
 
புனித பீட்டர் பந்­து­வீச்சில் அஷாந்த் மல்கா 15 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்கெட்­களைக் கைப்­பற்­றினார்.
 
115 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பலம் வாய்ந்த புனித பீட்டர் 17.3 ஓவர்­க ளில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 92 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று தோல்­வியைத் தழு­வி­யது.
 
இதில் ல­க்ஷித ரொட்­றிகோ 39 ஓட்­டங்­க­ளையும் தனீஷ வீரக்கூன் ஆட்­ட­மிழக்­காமல் 25 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.
 
புனித பெனடிக்ட் பந்துவீச்சில் கீதால் பெர்னாண்டோ 18 ஓட் டங்களுக்கு 4 விக்கெட்களையும் மதுஷான் குலரத்ன 7 ஓட்டங்க ளுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.