அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்டக் குழாமுக்கு அதி சிறந்த வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான திறமைசாலிகளை இனங்காணும் தேடல் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.
இதன் அடிப்படையில் வட மாகாணத்திற்கான தேர்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை 11ஆம் திகதி காலை 7.30 மணி முதல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமிருந்தும் உயரமான சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை இத் தேர்வில் கலந்துகொள்ள வருகை தருமாறு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன இடைக்கால நிர்வாக சபை கோரியுள்ளது.
இதேவேளைஇ கண்டிஇ காலிஇ பொலன்னறுவைஇ பதுளை ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 18ஆம் திகதியும் கொழும்பு மாவட்டத்தில் 19ஆம் திகதியும் தேர்வுகள் நடைபெறவுள் ளன.