இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களாக அஞ்சலோ மேத்யூஸ், நியூசிலாந்தின் ஜீடன் பட்டேல், இங்கிலாந்தின் மொயீன் அலி, கெரி பலான்சே, அடம் லயித் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சங்கக்காரா இந்த விருதை பெறவுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கு முன்னர் இந்தியாவின் விரேந்திர ஷேவாக் இரண்டு முறை இந்த விருதினை பெற்றிருந்தார்.
1889ம் ஆண்டு முதல் விஸ்டன் சஞ்சிகையின் ஆசிரியரினால் வருடத்தின் 5 சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.
2004ம் ஆண்டிலிருந்து உலகின் முன்னிலை வீரருக்கான விருதும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.