வேகப்பந்து வீச்சாளரான சானக வெலகெதர உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டுவெண்டி 20 போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து சாதனையொன்றை சமப்படுத்தியுள்ளார்.
தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிவரும் அவர் எஸ்.எஸ்.சி கழகத்துக்கு எதிரான குறித்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு ஓட்டமற்ற ஓவர்களாகும்.
இதன்படி டுவெண்டி 20 போட்டியொன்றில் வீரரொருவர் 4 ஓவர்களில் பதிவுசெய்த மிகச் சிக்கனமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
தென்னாபிரிக்க ‘ஹைவெல்ட் லயன்ஸ்’ கழக வீரரான கிரிஸ் மொரிஸ் கேப் கோப்ராஸ் கழகத்துக்கு எதிரான போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையே இதுவரை காலமும் சாதனையாக இருந்து வந்தது.
இந்நிலையில் இச்சாதனையை வெலகெதர தற்போது சமப்படுத்தியுள்ளார்.