இலங்கை ‘ஏ’ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. தற்போது இலங்கை ‘ஏ’ அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவருகிறது.
இந்தப் போட்டி கடந்த 3ஆம் திகதி கிரேஸ் ரோட், லீசெஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ‘ஏ’ அணி முதலில் இலங்கை ‘ஏ’ அணியைத் துடுப்பாட அழைப்புவிடுத்தது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை ‘ஏ’ அணி 299/10 (79.5)
மஹேல உடவத்த 64
ரொஷேன் சில்வா 48
சச்சித் பத்திரன 45
மினோத் பனுக்க 33
ஹஸன் அலி 63/4
பாகிஸ்தான் ‘ஏ’ அணி 277 (88)
முஹமத் நவாஸ் 68
பாபர் அசாம் 61
சார்ஜீல் கான் 42
அஷான் பிரியன்ஜன் 25/2
அசித்த பெர்னாண்டோ 42/2
சச்சித் பத்திரன 54/2
லஹிரு கமகே 68/2
இலங்கை ‘ஏ’ அணி 131/10 (62.5)
சச்சித் பத்திரன 21*
மினோத் பனுக்க 26
ரொஷேன் சில்வா 17
அசீசுல்லா 21/4
முஹமத் நவாஸ் 31/4
இதன் பின் வெற்றி இலக்கான 154 ஓட்டங்களை நோக்கித் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் விஷ்வ பெர்னான்டோ மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தியுள்ளனர். போட்டியின் 4ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி வெற்றி பெற 5 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க இன்னும் 116 ஓட்டங்களைப் பெற வேண்டும். அத்தோடு இலங்கை ‘ஏ’ அணி வெற்றி பெற பாகிஸ்தான் ‘ஏ’ அணி இன்னும் 116 ஓட்டங்களைப் பெற முன் 5 விக்கட்டுகளை மட்டுமே கைப்பற்றியாக வேண்டும். இதனால் இப்போட்டியில் இலங்கை ‘ஏ’ அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.