சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடவிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று
இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை அணி விளையாடும் முதல் தொடராக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமைகின்றது.
அதன்படி இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (21) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையிலேயே, இப்போட்டியில் விளையாடவிருக்கும் இலங்கையின் 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திமுத் கருணாரட்ன தலைமையிலான இந்த வீரர்கள் குழாத்தில், இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வு எடுத்திருக்கும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவின் இடத்தினை, டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இலங்கை குழாத்தில் காணப்படுகின்ற பெதும் நிஸ்ஸங்க அல்லது ஒசத பெர்னாண்டோ எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் முதல் டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் 6 முதன்மை துடுப்பாட்ட வீரர்களும், 3 சுழல்பந்துவீச்சாளர்களும் 2 வேகப்பந்துவீச்சாளர்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இலங்கை டெஸ்ட் குழாத்தில் முதன்முறையாக உள்வாங்கப்பட்ட சரித் அசலன்க முதல் போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார் ஏபி டி வில்லியர்ஸ்
எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ், இலங்கை அணியின் கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடாது போன லசித் எம்புல்தெனிய ஆகிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம்
- திமுத் கருணாரட்ன (அணித்தலைவர்)
- பெதும் நிஸ்ஸங்க
- அஞ்செலோ மெதிவ்ஸ்
- ஒசத பெர்னாண்டோ
- தினேஷ் சந்திமால்
- தனன்ஞய டி சில்வா
- ரமேஷ் மெண்டிஸ்
- லசித் எம்புல்தெனிய
- சுரங்க லக்மால்
- துஷ்மன்த சமீர
- பிரவீன் ஜயவிக்ரம
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<