மொத்தம் 18 பேர் அடங்கிய இலங்கையின் தேசிய இளையோர் வலைப்பந்து அணிக் குழாம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
Photos – Youth Netball 18-Player Squad Selection Trials 2023
தென் கொரியாவில் ஜூன் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை 2023ஆம் ஆண்டுக்கான இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தொடருக்கு இலங்கை வீராங்கனைகளை தயார்படுத்தவே தேசிய இளையோர் வலைப்பந்து அணியானது தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
தேசிய பயிற்சியாளர் அமால்கா குணத்திலக்க தலைமையில் தற்போது பயிற்சிகளைப் பெறவுள்ள இந்த தேசிய இளையோர் வலைப்பந்து அணி, ஆசிய சம்பியன்ஷிப் தொடர் நடைபெற சில நாட்களின் முன்னர் 12 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்பட்டு தென்கொரியா செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் இளம் வீராங்கனைகள் கொண்ட தேசிய அணிக்குழாமானது முன்னாள் தேசிய வலைப்பந்து அணித்தலைவி தமயந்தி ஜயத்திலக்க, திசாங்கனி கொடித்துவக்கு மற்றும் சாமிக்க ஜயசேகர ஆகியோர் கொண்ட குழுவினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தேசிய இளையோர் வலைப்பந்து அணிக்குழாம்
S.N. உடகெதர, மினாகி கன்காணிகே, டிஷார உமயங்கனி, ஹிருனி ஹேஷானி, டில்மி விஜேநாயக்க, சஜினி ரத்நாயக்க, இதுஷா பெரேரா, நெத்மி பெரேரா, நெத்மி விஜேநாயக்க, உதாரி குருகே, சலானி நீஷா, தருஷி பெரேரா, TM. வசந்தப்பிரியா, ST. பதிரனகே, நெதாங்க குணரட்ன, சரஷி கவிந்திக, தேவ்மி பமுனுஆராச்சி, ஜினாலி பாலசூரிய
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<