யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளன் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் (CSK) வலைப்பந்துவீச்சாளராக (Net Bowler) அழைக்கப்பட்டிருக்கின்றார்.
பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் 117ஆவது வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் பிரபல்யமாக மாறியிருந்தது. குகதாஸ் மாதுளன் 117ஆவது வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் வீரராக ஆடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது மாதுளன் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழாம் மற்றும் அதன் தலைவர் மஹேந்திர சிங் டோனி ஆகியோரின் கண்கானிப்பில் பயிற்சிகளைப் பெறுவதோடு, இம்முறை IPL தொடரில் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
குகதாஸ் மாதுளன் சர்வதேச அரங்கில் சிறப்பாக செயற்பட ThePapare.com உம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<