நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான 142ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி (Big Match) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் பழமையான பெரும் சமர் போட்டியாக இந்த இரு கல்லூரிகளுக்கும் இடையிலான இந்த மோதல் உள்ளது. இந்நிலையில் 142 ஆவது நீலங்களின் சமர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட போதும், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த போட்டியானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
>> செப்டம்பரில் நடைபெறவுள்ள 142ஆவது நீலங்களின் சமர்
எனினும், இந்த கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுக்குழு (JOC) அறிவித்திருப்பதன் அடிப்படையில், 142ஆவது நீலங்களின் சமர் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பார்வையாளர்கள் எவருமின்றி நடைபெறும் என முதலில் குறிப்பிடப்பட்டது. .
முன்னதாக இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவானது, இந்தப் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஏனைய போட்டி உத்தியோகத்தர்கள் அனைவரும் 21 நாட்கள் கொண்ட உயிர் பாதுகாப்பு வலயத்தினுள் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் தற்போது நாட்டில் கொவிட் 19 வைரஸ் காரணமாக நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்தச் சமர் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<