இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மேஜர் T20 லீக் கிரிக்கெட் தொடரின்; இரண்டாவது வாரத்தின் மூன்றாவது நாளான இன்று எட்டு போட்டிகள் (10) நிறைவுக்கு வந்தன.
இதில் இலங்கை அணியின் அனுபவ சகலதுறை வீரர்களில் ஒருவரான ஜீவன் மெண்டிஸ் அதிரடியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த களுத்துறை கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இம்முறை கழக மட்ட T20 போட்டிகளில் ஐந்து விக்கெட் குவியலை எடுத்த மூன்றாவது வீரராக ஜீவன் மெண்டிஸ் இடம்பிடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
>> பொலிஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய கபில்ராஜ்
38 வயதான ஜீவன் மெண்டிஸ், இலங்கை அணிக்காக இறுதியாக 2018இல் பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 போட்டியில் விளையாடியிருந்தார். எனினும், கிரிக்கெட் அரங்கிலிருந்து இதுவரை ஓய்வை அறிவிக்காத அவர், உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, இலங்கை அணியின் மற்றுமொரு அனுபவ வீரரான டில்ஷான் முனவீர (74) மற்றும் லஹிரு மிலன்தவின் (66) அரைச்சதங்களின் உதவியுடன் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 24 ஓட்டங்களால் நுகேகொட விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியது.
இதேவேளை, குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சமநிலையில் நிறைவுக்கு வந்தது. குறித்த போட்டியில் இரண்டு அணிகளும் 155 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
>> மேஜர் T20 லீக்கில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த அசேல, திக்ஷில மற்றும் தனன்ஜய லக்ஷான்
இதுஇவ்வாறிருக்க, இன்று நடைபெற்ற போட்டிகளில் காலி, விமானப்படை, ப்ளூம்பீல்ட், ராகம மற்றும் தமிழ் யூனியன் ஆகிய கழகங்களை வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
A பிரிவு – (SSC மைதானம்)
நுகெகொட விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
நுகெகொட விளையாட்டுக் கழகம் – 153/5 (20) – முதித்த லக்ஷான் 60, ப்ரமோத் ஹெட்டிவத்த 51, ரொஷேன் பெர்னாண்டோ 2ஃ28, நிஷான் பிரீஸ் 1ஃ26
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 154/1 (16.5) – டில்ஷான் முனவீர 74, லஹிரு மிலன்த 66, விக்கும் சன்ஜய 1/29
முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி
காலி கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்
காலி கிரிக்கெட் கழகம் – 145/7 (20) – எரங்க ரத்னாயக்க 45, டில்ஷான் கான்ஞன 40, சம்பத் பெரேரா 3/34
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 121/10 (19.1) – சானக்க விஜேசிங்க 24, சசித் மனுரங்க 23, சலன டி சில்வா 4/23, நிமேஷ் பெரேரா 2/17
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி
B பிரிவு – (கட்டுநாயக்க மைதானம்)
விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ACP கெபிடல் கிரிக்கெட் கழகம்
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 153/8 (20) – ரவிந்து செம்புகுட்டிகே 46, உதயவன் பராக்ரம 25, இஷான் அபேசேகர 3/24
ACP கெபிடல் கிரிக்கெட் கழகம் – 143/7 (20) – இரோஷ் சமரசூரிய 53, ப்ரஷான் விக்ரமசிங்க 27, சன்ஜய ரணவீர 2/14, அரவிந்த ப்ரேமரட்ன 2/20
முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 10 ஓட்டங்களால் வெற்றி
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
லங்கன் கிரிக்கெட் கழகம் – 136/4 (20) – ஹர்ஷ குரே 50*, தமித சில்வா 34, டிலும் பெர்னாண்டோ 2/24
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 140/6 (19.1) – நிபுன் ஹக்கல்ல 57, தமித சில்வா 2/20
முடிவு – ப்ளூம்பீல்ட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி
C பிரிவு – (CCC மைதானம்)
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 74/10 (13.5) – தாரக வடுகே 23, பன்சிலு தேஷான் 21, ஜீவன் மெண்டிஸ் 5/21, தனுக உதார 1/6
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 75/2 (8.4) – ரனித லியனாரச்சி 39, மஹேல உடவத்த 24, மிதுன் ஜயவிக்ரம 2/25
முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 155/3 (20) – கயான் மனீஷான் 85, தனுஷ்க தர்மசிறி 28, லஹிரு தியன்த 2/23
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 155/8 (20) – மதுரங்க சொய்ஸா 62, அசேல் சிகேரா 22, சுபுன் மதுஷங்க 21, ரன்தீர ரணசிங்க 2/26, நிம்சர அத்தரகல்ல 3/27
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
D பிரிவு – (NCC மைதானம்)
சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் – 116/10 (19.1) – சன்ஜய சதுரங்க 33, ஹேஷான் 17, பினுர பெர்னாண்டோ 3/22
ராகம கிரிக்கெட் கழகம் – 120/4 (19.2) – நிஷான் மதுஷங்க 58, சமிந்த பெர்னாண்டோ 15, அயன சிறிவர்தன 1/11, ஆகாஷ் சேனாரத்ன 1/19
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 141/7 (20) – சிதார கிம்ஹான் 32, சுபுன் காவிந்த 28, சச்சித ஜயதிலக்க 2/19, தரூஷ பெர்னாண்டோ 2./21
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 92/10 (20) – சச்சா டி அல்விஸ் 31, விஹான் குணசேகர 22, ஷிரான் பெர்னாண்டோ 4/19, ப்ரமோத் மதுஷான் 2/15
முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 49 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<