இலங்கையில் நீல வரிகளை கொண்ட பாடசாலைகளின், நீல நிறத்தின் சமர் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் போட்டி 138ஆவது தடவையாகவும் புதுப் பொழிவுடன் டிஎஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்துக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் கொழும்பு SSC கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நேற்று மாலை விளையாட்டு அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் குறித்த ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்களான, றோயல் கல்லூரி அதிபர் B.A. அபேரத்ன, புனித தோமியர் கல்லூரியின் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மார்க் பில்லிமோரியா, போட்டி அணுசரணையாளர்கள், கிரிக்கெட் வீரர்கள், மாணவத் தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
Photo Album: 138th Battle of the Blues – Press Conference 2017
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. இவ்விரு கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மிகவும் பழைமை வாய்ந்த மற்றும் பெருமைமிக்க இந்த போட்டிக்கு அர்ப்பணிப்புடன் தமது சேவையை தொடர்ந்தும் வழங்கவுள்ளது.
மீண்டுமொரு முறை குறித்த போட்டியில் எடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் 1000 ரூபாவும் அதேநேரம் வீழ்த்தப்படும் விக்கெட்டுகளுக்கு 10,000 ரூபாவும் வழங்க உறுதியளித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 137ஆவது போட்டியின் போது குறித்த உறுதிமொழிக்கமைய மொத்தமாக ரூபா. 1,255,000 பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது.
“மிக மோசமாக தோல்வியுற்றாலும், தோமியர் கல்லூரிக்காக சாகுங்கள் என்று நாம் கூறமாட்டோம். நாம் எங்களை எவ்வாறு வரையறுக்கின்றோம் என்றால், நாம் விழக்கூடாது. அதை விட வீழ்ந்த பின்னர் எப்படி நாம் மீண்டெழுகின்றோம் என்பதே முக்கியமாகும்” என்று புனித தோமியர் கல்லூரியின் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மார்க் பில்லிமோரியா தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் தடவையாக இவ்விரு கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் போது தொலைகாட்சி நடுவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. அதேநேரம் களத்திலுள்ள நடுவர்களுக்கு ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் போன்ற விடயங்களில் உதவி செய்யும் நோக்கில் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய இருவழி அலைபேசி போட்டி முழுவதும் பயன்படுத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
“இந்த இரண்டு பாடசாலைகளுக்கிடையே நட்பு சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை பல தசாப்த (தலைமுறை) காலமாக புரிந்துணர்வுடன் நடைபெற்று வருகின்றது. இது ஒரு போட்டி மாத்திரமல்ல நெடுங்கால வரலாற்றை கொண்ட இந்த நிகழ்வை கொண்டாடும் சந்தர்ப்பமாகவும் இருக்கிறது” என்று றோயல் கல்லூரி அதிபர் B.A. அபேரத்ன தெரிவித்தார்.
பெருமை மிக்க மற்றும் வர்ணமயமான வரலாற்றை கொண்ட றோயல் மற்றும் தோமியர் சமர் 1879ஆம் ஆண்டு ஆரம்பித்த அதேநேரம் தொடர்ச்சியாக வருடம்தோரும் நடைபெற்று வரும் உலகிலுள்ள இரண்டாம் போட்டியாகும். முதலாவதாக இந்த போட்டிகளுக்கு, ஒரு வருடத்துக்கு முன்தாக ஆரம்பிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அடிலெய்ட் நகரிலுள்ள புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பர்ட் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றுவரும் போட்டியாக இருக்கிறது.
அதேநேரம் இவ்விரு கல்லூரிகளுக்காக விளையாடியிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பின்னர் நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். புனித தோமியர் கல்லூரியை சேர்ந்த, இலங்கை நாட்டின் முதலாவது பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. டி எஸ் சேனநாயக்க, மற்றும் அவரது மகன் கெளரவ. டட்லி சேனாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமராக உருவெடுத்த அதேநேரம் றோயல் கல்லூரியை சேர்ந்த இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. ஜே ஆர் ஜயவர்தன மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரும் நாட்டின் தலைவர்களாக உருவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.