இலங்கையில் நீல நிறங்களின் சமர் என்று பொதுவாக அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாட்களை கொண்ட கிரிக்கெட் போட்டி, 138ஆவது தடவையாகவும் புதுப் பொழிவுடன் டிஎஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்துக்காக கொழும்பு SSC மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது.
நேற்றைய தினம் கொழும்பு, றோயல் கல்லூரி பெற்றுக்கொண்ட 255 ஓட்டங்களுக்கு பதிலாக தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய தோமியர் கல்லூரி, முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 33 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த வகையில் தொடர்ந்து இரண்டாம் நாளுக்காக களமிறங்கிய அவ்வணி, றோயல் கல்லூரியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களை பெற்றிருந்த போது சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டியானது, சுமார் 28 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் இடைநிறுத்தப்பட்டது.
23 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரவிந்து கொடிதுவக்கு, நிதானமாக துடுபாடி சதமடிக்க 2 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், துரதிஷ்வசடமாக 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். எனினும், தொடர்ந்து களமிறங்கிய சித்தார ஹப்புஹின்ன இன்று ஆட்டம் நிறுத்தப்படும் பொழுது ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களுடனும், ரொமேஷ் நல்லப்பெரும 32 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
[rev_slider dfcc728]
அதேநேரம் கொழும்பு றோயல் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹிமேஷ் ராமநாயக்க 57 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் கணித் சந்தீப மற்றும் மனுல பெரேரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
3.45 மணியளவில், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியானது சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு பின்னர் நாளை போட்டி 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 113 ஓவர்கள் வரை வீசப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்:
றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 255 (71.3) – கனித் சந்தீப 42, ஹிமேஷ் ராமநாயக்க 41, கவிந்து மதரசிங்க 38, பசிந்து சூரியபண்டார 35, ரோனுக்க ஜயவர்தன 32, கழன பெரேரா 5/47, பவித் ரத்னாயக்க 2/69
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 255/4 (72) – ரவிந்து கொடிதுவக்கு 98, சித்தார ஹப்புஹின்ன 54*, ரொமேஷ் நlலப்பெரும 32*, துலிப் குணரட்ன 35