இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மேஜர் டி-20 லீக் கிரிக்கெட் தொடரின்; இரண்டாவது வாரத்தின் மூன்றாவது நாளில் எட்டு போட்டிகள் இன்று (10) நிறைவுக்கு வந்தன.
இதில் களுத்துறை நகர விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த பொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டிய, சுஜான் மயுர 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கனகரத்னம் கபில்ராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
உள்ளூர் முதல்தரப் போட்டியொன்றில் முதல்தடவையாகக் களமிறங்கிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கபில்ராஜ், பொலிஸ் கழகம் சார்பில் முதல்தடவையாக் களமிறங்கி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
மேஜர் T20 லீக்கில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த அசேல, திக்ஷில மற்றும் தனன்ஜய லக்ஷான்
இறுதியாக அவர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற லங்கா ப்ரீமிய்ர லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ளுளுஊ மைதானத்தில் ஏ பிரிவுக்காக நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், 26 ஓட்டங்களால் பதுரெலிய கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.
இதில் எஸ்எஸ்சி அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற லசித் அபேரட்ன, இம்முறை போட்டித் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைச் சதத்தைப் பதிவு செய்தார்.
ஆத்துடன், சிசிசி கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய லஹிரு கமகே 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை எடுத்து மிரள வைத்தார்.
உள்ளூர் T20 லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வரும் அஞ்சலோ பெரேரா
இதனிடையே, ராகம கழகத்துக்கு எதிரான போட்டியில், அசேல குணரட்ன பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் 31 ஓட்டங்கள் வித்தியாத்தில் இராணுவ கிரிக்கெட் கழகம் வெற்றிபெற்றது.
இராணுவ கழகத்துக்காக அபாரமாக விளையாடிய அசேல குணரட்ன, இம்முறை போட்டித் தொடரில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது அரைச் சதத்தைப் (57) பதிவு செய்தார்.
இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிபுன் தனன்ஜயவின் அரைச்சதத்தின் உதவியுடன் எஸ்எஸ்சி கழகம் 22 ஓட்டங்களால் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.
போட்டியின் சுருக்கம்
A பிரிவு – (SSC மைதானம்)
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 142/6 (20) – லசித் அபேரட்ன 52, லஹிரு மதுஷங்க 31, மினோத் பானுக்க 24, புத்திக சன்ஜீவ 3/24, சாமிக எதிரிசிங்க 2/27
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 116/10 (19.1) – யசோதா லங்கா 41, புத்திக சன்ஜீவ 25*, லஹிரு கமகே 4/13, லஹிரு மதுஷங்க 2/15
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 26 ஓட்டங்களால் வெற்றி
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 159/5 (20) – விஷ்வ விஜேரட்ன 52, சசித் மனுரங்க 50, வினோத் பெரேரா 3/24
நுகேகொட விளையாட்டுக் கழகம் – 116/10 (19.4) – உமேஷ் கருணாரட்ன 22, சச்சித்ர பெரேரா 3/12, ஷெஹான் வீரசிங்க 2/12
முடிவு – கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி
B பிரிவு – (CCC மைதானம்)
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் என்சிசி கழகம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 103/10 (19.1) – சந்தூஷ் குணதிலக்க 22, அஷேய்ன் டேனியல் 3/12, சதுரங்க டி சில்வா 2/19, சாமிக குணசேகர 2/25
NCC கழகம் – 105/2 (12.4) – சதுரங்க டி சில்வா 46, சாமிக கருணாரட்ன 41*
முடிவு – NCC கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
ACP கெபிடல் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
ACP கெபிடல் கிரிக்கெட் கழகம் – 95/9 (20) – இரோஷ் சமரசூரிய 39, கீத் குமார 4/13, தமித சில்வா 2/17
லங்கன் கிரிக்கெட் கழகம் – 98/3 (19.1) – தமித சில்வா 41*, சவன் கன்கானம்கே 32, இஷான் அபேசேகர 2/23
முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
C பிரிவு – (கோல்ட்ஸ் மைதானம்)
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 124/5 (20) – கசுன் விதுர 50, புலின தரங்க 40, கலன பெரேரா 2./21, ஹமேஷ் ராமநாயக்க 2/25
SSC கழகம் – 127/3 (17.4) – நிபுன் தனன்ஜய 80*, நுவனிந்து பெர்னாண்டோ 31
முடிவு – SSC கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 108/8 (20) – கிஹான் ரூபசிங்க 33, சுஜான் மயுர 3/19, கனகரத்னம் கபில்ராஜ் 2/23
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 113/3 (13.2) – அசேல் சிகேரா 44*, நிலன்க சந்தகென் 2/35
முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
D பிரிவு – (பி. சரா ஓவல் மைதானம்)
பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 143/5 (20) – ஹஷான் சாமர 34, கவிந்து அஷான் 33, சானக்க ருவன்சிறி 2/08
கடற்படை விளையாட்டுக் கழகம் – 115/10 (18.3) – சாலித் பெர்னாண்டோ 29, டபிள்யூ மயன்த 26, நிமேஷ் விமுக்தி 3/14, யொமேஷ் ரணசிங்க 3/22
முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் 28 ஓட்டங்களால் வெற்றி
இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
இராணுவ விளையாட்டுக் கழகம் – 143/6 (20) – அசேல குணரட்ன 57, அசன்த பஸ்நாயக்க 26*, இஷான் ஜயரட்ன 3/26
ராகம கிரிக்கெட் கழகம் – 112/8 (20) – நிஷான் மதுஷங்க 24, இஷான் ஜயரட்ன 23, ஜனித் சில்வா 2/12, சஷிக டில்ஷான் 2/15
முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 31 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<