நான்காவது முறையாகவும் இடம்பெறும் 2016ஆம் வருடத்துக்கான பங்களாதேஷ் T20 கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பமாக உள்ளன. இப்போட்டிகள் இன்று முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இதில் இலங்கை அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள 12 பேர் பங்குகொள்கின்றனர்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் கமிலா விக்டோரியன்ஸ் அணியும் ராஜஷஹி கிங்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன. கமிலா விக்டோரியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளராக நுவான் குலசேகரவும், ராஜஷஹி கிங்ஸ் அணி சார்பாக துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க மற்றும் சகல துறை ஆட்டக்காரர் மிலிந்த சிறிவர்தனவும் பங்குபற்றுகின்றனர்.
அதேநேரம், கிரிக்கெட் ஜாம்பவான்களாகிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் டாக்கா டைனமிக்ஸ் அணிக்காக ஒரே அணியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளுக்காக பின்வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்குகொள்கின்றனர்.
- பரிசல் புல்ஸ் அணி : தில்ஷான் முனவீர
- சிட்டகொங் விக்கிங்ஸ் : சதுரங்க டி சில்வா, ஜீவன் மென்டிஸ்
- கமிலா விக்டோரியன்ஸ் : திசர பெரேரா, நுவான் குலசேகர
- டாக்கா டைனமிக்ஸ் : மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, சீகுகே பிரசன்ன
- ரங்பூர் ரைடர்ஸ் : சஜித்ர சேனாநாயக்க, தசுன் சானக
- ராஜஷஹி கிங்ஸ் : மிலிந்த சிறிவர்தன, உபுல் தரங்க
பங்குபற்றும் அணி மற்றும் வீரர்களின் விபரங்கள்
பரிசல் புல்ஸ்: ரம்மான் ரயிஸ், தில்ஷான் முனவீர, முஷ்பிகுர் ரஹிம், அல்–அமீன் ஹொசைன், தைஜுள் இஸ்லாம், முகமது நவாஸ், கார்லோஸ் பிராத்வெய்ட், ஷம்சூர் ஏ. ஆர். ரகுமான், அபு ஹிதர், கம்ருள் இஸ்லாம் ரபீ, நதிப் சவுத்ரி, ஜோஷ் கோப், மஹேடி ஹசன், மோநிர் ஹொசைன் கான், ஷாரியார் நபீஸ்
சிட்டகொங் விக்கிங்ஸ்: தமிம் இக்பால், அனமுள் ஹக், கிறிஸ் கெய்ல், டுவைன் ஸ்மித், சோயிப் மலிக், முகமது நபி, டாஸ்கின் அகமது, சத்துரன்க டி சில்வா, எலியட், இம்ரான் கான், அப்துர் ரசாக், சுபஷிஸ் ராய், ஜகுருள் இஸ்லாம், நஸ்முல் ஹொசைன் மிலான், ஜீவன் மெண்டிஸ், டிமல் மில்ஸ், ஜாகீர் ஹசன், சக்லின் சஜிப், ஷதுல் இஸ்லாம், யாசிர் அலி சவுத்ரி, ஜாபிர் ஹொசைன்
கமிலா விக்டோரியன்ஸ்: இம்ருள் கைஸ், லிட்டன் தாஸ், அசார் ஜைதி, இமாத் வாசிம், பெரேரா, மஷ்ரஃபீ மோர்டசா, சொகைல் தன்வீர், நுவன் குலசேகர, ரஷீத் கான், ரோவ்மன் பவல், காலித் லத்தீப், ஷஹ்சைப் ஹசன், அல்–அமீன், நஸ்முல் ஹொசைன் சண்டோ, நஹிதுல் இஸ்லாம், முகமது சைபுதீன், ஜேசன் ஹோல்டர், முகமது ஷெரீப், நபில் சமத், ஜசிமுட்டின், சைகட் அலி, ரசல் அல் மாமூன்
டாக்கா டைனமிக்ஸ்: எவின் லூயிஸ், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, சாகிப் அல் ஹசன், ரவி பொபாரா, நசீர் ஹொசைன், மோசட்டக் ஹொசைன், ஆந்த்ரே ரசல், டுவைன் பிராவோ, சீகுகே பிரசன்ன, வெய்ன் பார்னெல், சஞ்சமுல் இஸ்லாமியம், அலாவுதீன் பாபு, சுஹ்ராவடி சுவோ, மகடி மருப், உஸாமா மிர், முகமது ஷாஹித், இர்பான் சுக்கூர், தன்வீர் ஹைதர்
குல்னா டைட்டன்ஸ்: மஹ்மதுல்லா, நிக்கோலஸ் பூரன், ரிக்கி வாசல்ஸ், கவான் கூப்பர், முகமது அஸ்கர், பென்னி ஹோவெல், மொஷாராஃப் ஹொசைன், லென்டில் சிமன்ஸ், பென் லாப்லின், ஷுவ்கட்ட ஹாம், அறிபுல் ஹக், அப்துல் மஜீத், அலோக் கபாலி, பிளட்சர், ஜூனைட் கான், ஹசன் உஸ்மான், நயீம் இஸ்லாமியம் மகன், நூர் ஹொசைன் சதாம், தைபூர் ஏ.ஆர்.ரகுமான், அப்துல் ஹலிம், ஷபியுல் இஸ்லாம்
ரங்பூர் ரைடர்ஸ்: சவுமிய சர்க்கார், ஷர்ஜீல் கான், முகமது ஷஹ்சாத், கிட்ரோன் போப், முகமது மிதுன், பாபர் ஆஸம், ஷாஹித் அப்ரிடி, டசுன் சானக, அரபாத் சன்னி, ரிச்சர்ட் க்லீசொன், நசீர் ஜாம்ஷெட், சஜித்ர சேனாநாயக்க, ரூபல் ஹொசைன், சோஹக் காஜி, ஜியாவுர் ஏ. ஆர். ரகுமான், நயீம் இஸ்லாமியம், கிஹான் ரூபசிங்க, எலியாஸ் சன்னி, பிணக் கோஷ், முக்தர் அலி, மிஹ்ராப் ஹொசைன், ஷாபாஸ் சவுகான்
ராஜஷஹி கிங்ஸ்: சப்பீர் ஏ. ஆர். ரகுமான், டேரன் சமி, முகம்மது சாமி, நுருல் ஹசன், மிலிந்த சிறிவர்தன, உபுல் தரங்க, மொம்னுள் ஹக், பர்ஹத் ரேசா, நஸ்முல் இஸ்லாமியம், ரகிபுல் ஹசன், சமித் படேல், அபுல் ஹசன், ரோனி தழுகதர், சல்மான் ஹொசைன்,எபடோட் ஹொசைன், மகாடி ஹசன் மிராஸ்.