Home Tamil இரண்டாம் நாளிலும் சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆதிக்கம்

இரண்டாம் நாளிலும் சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆதிக்கம்

187

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் அனுசரணையோடு 117ஆவது முறையாக நடைபெறும் வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (08) நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இரண்டாம் நாளிலும் சென். ஜோன்ஸ் கல்லூரி முன்னிலை வகிக்கின்றது.  

முதல் நாளில் பலம் பெற்றுள்ள யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 

யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, முதல் இன்னிங்ஸ் (157) துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியானது 30.5 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வலுவாகக் காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அன்டர்சன் சச்சின் 36 ஓட்டங்கள் பெற்றிருந்தார். 

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடக்கத்தில் அன்டர்சன் சச்சினின் விக்கெட்டினை 40 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. எனினும் பொறுப்புடன் ஆடிய சென். ஜோன்ஸ் தலைவர் நேசகுமார் ஜெசியல் அரைச்சதம் பெற்று தனது தரப்பினை வலுப்படுத்தியிருந்தார் 

பின்னர் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது தமது முதல் இன்னிங்ஸில் 70.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்கள் பெற்றது. அதன் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பெற்ற நேசகுமார் ஜெசியல் 7 பௌண்டரிகளோடு 52 ஓட்டங்களை விளாசியிருந்தார் 

மறுமுனையில் யாழ். மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் தகுதாஸ் அபிலாஷ் மற்றும் முரளி திசோன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, சுதர்ஷன் அனுசாந்த் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

தொடர்ந்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட 71 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த யாழ். மத்திய கல்லூரி அணியானது தொடக்கம் முதல் விக்கெட்டுக்களை இழந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 140 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து சரிவான நிலையில் காணப்படுகின்றது 

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா பயணம்

யாழ். மத்திய கல்லூரி அணியானது எதிர்தரப்பினை விட 69 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலை பெற்றிருக்க அவ்வணிக்கு போட்டியின் மூன்றாம் நாளில் ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது 

அதேவேளை யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை அதன் தலைவர் நிசாந்தன் அஜய் 23 ஓட்டங்களோடு பதிவு செய்தார் 

இதேவேளை சிறப்பாக செயற்பட்டிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சில் கிருபானந்தன் கஜகர்ணன், ஜெயச்சந்திரன் அஷ்னாத் மற்றும் ஸ்டான்லி சேம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர் 

போட்டியின் சுருக்கம் 

Result


Jaffna Central College
157/10 (56.5) & 149/10 (57.1)

St. John’s College, Jaffna
228/10 (70.4) & 81/0 (15)

Batsmen R B 4s 6s SR
Rajithkumar Newton lbw b Kugathas Mathulan 24 19 1 2 126.32
Arumaithural Sinthujan c Sangeeth Smith b Arulseelan Kavishan 0 25 0 0 0.00
Kevin Derixsan b Arulseelan Kavishan 15 16 3 0 93.75
Sathakaran Similtan c Mahendran Kinthushan b Arulseelan Kavishan 22 58 3 0 37.93
Antanreshan Abishek c Sangeeth Smith b Murfin Randyo 10 38 0 1 26.32
Shakadevan Sayanthan c Nesakumar Ebenezer Jezial b Mahendran Kinthushan 55 117 6 0 47.01
Nisanthan Ajay c Jeyachandran Ashnath b Arulseelan Kavishan 2 7 0 0 28.57
Thakuthash Abilash c Jeyachandran Ashnath b Arulseelan Kavishan 1 4 0 0 25.00
Sutharsan Anusanth c Jeyachandran Ashnath b Kugathas Mathulan 11 34 1 0 32.35
Vikneswaran Paruthi b Kugathas Mathulan 0 9 0 0 0.00
S. Thison not out 4 16 1 0 25.00


Extras 13 (b 8 , lb 1 , nb 2, w 2, pen 0)
Total 157/10 (56.5 Overs, RR: 2.76)
Bowling O M R W Econ
Murfin Randyo 4 0 4 1 1.00
Kugathas Mathulan 15 3 52 3 3.47
Arulseelan Kavishan 13 4 34 5 2.62
Kirupananthan Kajakarnan 4 1 3 0 0.75
Stanley Samson 12 2 25 0 2.08
Jeyachandran Ashnath 7 0 23 0 3.29
Mahendran Kinthushan 1.5 0 7 1 4.67
Batsmen R B 4s 6s SR
Uthayanan Abijoyshanth b S. Thison 39 38 3 2 102.63
Anderson Sachin Kanapathi c Kevin Derixsan b Sutharsan Anusanth 40 119 4 0 33.61
Mahendran Kinthushan c Nisanthan Ajay b Sutharsan Anusanth 22 59 0 0 37.29
Nesakumar Ebenezer Jezial c Nisanthan Ajay b Thakuthash Abilash 52 99 7 0 52.53
Murfin Randyo lbw b Thakuthash Abilash 22 65 3 0 33.85
Sangeeth Smith lbw b Thakuthash Abilash 0 1 0 0 0.00
Arulseelan Kavishan c Thakuthash Abilash b S. Thison 3 17 0 0 17.65
Jeyachandran Ashnath c Nisanthan Ajay b Thakuthash Abilash 11 9 1 1 122.22
Kirupananthan Kajakarnan not out 4 15 0 0 26.67
Kugathas Mathulan c Sathakaran Similtan b S. Thison 5 8 1 0 62.50
Stanley Samson c Thakuthash Abilash b S. Thison 0 2 0 0 0.00


Extras 30 (b 9 , lb 4 , nb 8, w 4, pen 5)
Total 228/10 (70.4 Overs, RR: 3.23)
Bowling O M R W Econ
Rajithkumar Newton 16 1 54 0 3.38
Sutharsan Anusanth 11 2 24 2 2.18
S. Thison 24.4 6 64 4 2.62
Vikneswaran Paruthi 10 0 39 0 3.90
Thakuthash Abilash 8 2 24 4 3.00
Arumaithural Sinthujan 1 0 5 0 5.00
Batsmen R B 4s 6s SR
Arumaithural Sinthujan run out (Kirupananthan Kajakarnan) 4 32 0 0 12.50
Sathakaran Similtan c Nesakumar Ebenezer Jezial b Kirupananthan Kajakarnan 21 64 3 0 32.81
Kevin Derixsan c Sangeeth Smith b Kirupananthan Kajakarnan 0 1 0 0 0.00
Sutharsan Anusanth lbw b Kirupananthan Kajakarnan 20 19 3 0 105.26
Rajithkumar Newton c Nesakumar Ebenezer Jezial b Jeyachandran Ashnath 17 24 2 0 70.83
Shakadevan Sayanthan st Sangeeth Smith b Stanley Samson 16 30 2 0 53.33
Nishan Sathakaran c Jeyachandran Ashnath b Stanley Samson 23 34 3 1 67.65
Thakuthash Abilash b Kugathas Mathulan 11 16 0 1 68.75
Antanreshan Abishek c Uthayanan Abijoyshanth b Jeyachandran Ashnath 1 7 0 0 14.29
Vikneswaran Paruthi lbw b Mahendran Kinthushan 20 64 3 0 31.25
S. Thison not out 5 54 0 0 9.26


Extras 11 (b 7 , lb 1 , nb 2, w 1, pen 0)
Total 149/10 (57.1 Overs, RR: 2.61)
Bowling O M R W Econ
Kugathas Mathulan 12 1 34 1 2.83
Arulseelan Kavishan 6 2 10 0 1.67
Kirupananthan Kajakarnan 16 9 28 2 1.75
Murfin Randyo 6 1 20 1 3.33
Jeyachandran Ashnath 9 1 30 2 3.33
Stanley Samson 8 2 19 2 2.38
Mahendran Kinthushan 0.1 0 0 1 0.00


Batsmen R B 4s 6s SR
Uthayanan Abijoyshanth not out 50 49 10 0 102.04
Anderson Sachin Kanapathi not out 30 42 3 1 71.43


Extras 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 81/0 (15 Overs, RR: 5.4)
Bowling O M R W Econ
Sutharsan Anusanth 5 0 25 0 5.00
S. Thison 2 0 12 0 6.00
Rajithkumar Newton 3 1 5 0 1.67
Thakuthash Abilash 4 0 26 0 6.50
Vikneswaran Paruthi 1 0 13 0 13.00



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் 

117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் நேரலையினை ThePapare.com ஊடாகவும், Dialog TV (அலைவரிசை எண். 127) ஊடாகவும் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<