யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியினது ஏற்பாட்டில் இளைய வீரர்களை (11 வயதின் கீழ்) கால்பந்தாட்டத்தில் ஊக்குவிக்கும் முகமாக ஒரு தசாப்த காலமாக, கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபரும் கால்பந்துப் பயிற்றுவிப்பாளருமான திரு.அமலசீலன் அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்து நடாத்தப்படும் கால்பந்துத் திருவிழா பத்தாவது முறையாக இந்த வருடமும் இடம்பெற்றது.
புனித பேதுரு கல்லூரியிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்த புனித பத்திரிசியார்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 1..
“The Pizza” நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற 11 வயதிற்குட்பட்ட வீரர்களிற்கான இந்த கால்பந்து திருவிழாவில் 10 அணிகள் பங்கெடுத்திருந்தன. மகாஜனாக் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் , சென் ஜேம்ஸ் மகா வித்தியாலயம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய அணிகளுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் இரு அணிகளும், ஏஞ்சல் பன்னாட்டு பாடசாலை சார்பில் மூன்று அணிகளும் பங்கெடுத்திருந்தன.
இவ் அணிகள் 03 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்ததுடன், பெற்றோரினது ஆதரவும், வருகையும் அதிகளவில் இருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வீரர்கள் வெற்றி தோல்வி தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி மகிழ்வுடனே இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தனர்.
நிகழ்வின் நிறைவில் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய என். ஞானப்பொன்ராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “சின்னஞ்சிறு வீரர்களை இன்று மகிழ்வாக விளையாடியிருப்பதோடு, அவர்கள் தொடர்ச்சியாக விளையாட்டில் இவ்வாறு ஈடுபடுத்துவதனூடாக உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த வேண்டும்” என்ற தனது அவாவினை வெளியிட்டார்.
பிரதம விருந்தினர் திரு. அமலசீலன் அவர்கள் “கடந்த காலங்களை விட இம்முறை பெற்றோரினது ஆதரவு அதிகரித்திருக்கின்றது. உண்மையில் விளையாட்டானது வீரர்களது திறைமைய வளர்ப்பது மட்டுமன்றி, மாணவர்களது ஒழுக்கத்தினை பேணுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. விளையாட்டுக்களில் ஈடுபடும் ஒருவர் தனது பெரும்பாலான நேரத்தினை மைதானத்திலும், வகுப்பறையிலுமே செலவிடுவார். இதனால் அவர் வழிதவறிப்போவதற்கு வாய்ப்பில்லை. இங்குள்ள பெற்றோர்கள் இதனை நன்கு அறிந்து வைத்துள்ளனர்” என்றார்.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு சாதனை வெற்றி
19 வயதுக்குட்பட்ட பிரிவு – III (டிவிஷன் – III)..
அனுசரணையாளர்களான The Pizza நிறுவனத்தின் உரிமையாளர் திரு. முரளி அவர்கள் “நாங்கள் சிறந்தவொரு முன்மாதியான எதிர்கால சந்ததியினை உருவாக்க வேண்டும். அதற்காக இளையவர்கள் வழிதவறிச் செல்லாது இருக்க வேண்டும். இதுவே நாம் இந்த தொடரிற்கு ஆதரவு வழக்குவதற்கு காரணமாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
இளைய விரர்கள் இந்த திருவிழாவுடன் மாத்திரம் தமது கால்பந்து பயிற்சியினை கைவிட்டுவிடாது, தொடர்ச்சியாக இத்துறையில் ஈடுபட வேண்டும். இதற்கு பெற்றோர் தமது தொடர்ச்சியான ஆதரவினை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நல்லொழுக்கமுள்ள கால்பந்து வீரர்களாக உருவாகுவதற்கு Thepapare.comஇன் வாழ்த்துக்கள்.