வடக்கின் தங்கச் சமரில் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலையில்

266

6 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் இம்முறை 103 ஆவது வருடமாக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் மோதும்  வணக்கத்திற்குரிய அருட்தந்தை T.M.F லோங் சவால் கிண்ணத்திற்கான போட்டியானது இன்றய தினம் (28) புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. முதல் நாள் ஆட்ட நிறைவில் 8 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 29 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி அணி முன்னிலை பெற்றுள்ளது. 

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரியின் தலைவர் ஐவன் ரொஸந்தன் யாழ்ப்பாண கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்தார். அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய யாழ்ப்பாண கல்லூரி 4 ஓட்டங்களை பெற்றிருக்கையில் கீர்த்தனின் பந்து வீச்சில் முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடர்ந்தும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய யாழ் தரப்பினரிற்காக  அணியின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சாளர் டனிசியஸ் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்க்க யாழ்ப்பாண கல்லூரி 81 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

மீண்டும் ஆரம்பமாகும் தங்கச் சமர்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார்……

யாழ்ப்பாண கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கௌசிகன் 22 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார் .

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி, டிலக்சனின் அரைச்சதத்தின் உதவியுடன் முதலாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் கீர்த்தனன் 30 ஓட்டங்களுடனும், கஸ்டோ 10 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 

Photos : 103rd TMF Long Challenge Trophy | Battle of the Golds | Jaffna College vs St Patrick’s College – Day1

8 விக்கெட்டுக்கள் மீதமுள்ள நிலையில் 29 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரவிருக்கின்றது.

போட்டியில் விரைவாக ஓட்டங்களை குவித்து யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி ஒன்றை நோக்கி நகர்வதே புனித பத்திரிசியார் கல்லூரியின் எதிர்பார்ப்பாகவுள்ள நிலையில், இந்த அழுத்தத்தை எதிர்கொண்டு போட்டியை சமநிலை நோக்கி நகர்த்துவதே யாழ்ப்பாண கல்லூரியின் நோக்கமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாண கல்லூரி – 81 (52) – கௌசிகன் 22,  டனிசியஸ் 6/24 

புனித பத்திரிசியார் கல்லூரி – 110/2 (40) – டிலக்சன் 60, கீர்த்தன் 30*

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<