Home Tamil மலையக நீலங்களின் சமரில் புனித அந்தோனியர் கல்லூரி முன்னிலை

மலையக நீலங்களின் சமரில் புனித அந்தோனியர் கல்லூரி முன்னிலை

180

மலையக நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் புனித அந்தோனியர் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டி, இன்று (8) கட்டுகஸ்தோட்டையில் 102ஆவது தடவையாக ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித அந்தோனியர் கல்லூரி அணியினர், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை  தேர்வு செய்து கொண்டனர்.

இதன்படி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த புனித அந்தோனியர் கல்லூரி அணிக்கு, தொடக்க துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த சமிந்து விக்கிரமசிங்க மற்றும் அசித வன்னிநாயக ஆகியோர் நல்ல முறையில் ஓட்டங்கள் சேர்த்து உதவினர்.

கலன – உமயங்க ஆகியோரின் அபார ஆட்டத்தால் தோமியர் கல்லூரி முன்னிலையில்

கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையில்…

இதில் சமிந்து விக்கிரமசிங்க அபாரமான முறையில் சதம் ஒன்றினைப் பெற்றிருந்தார். மொத்தமாக 190 பந்துகளை எதிர்கொண்ட விக்கிரமசிங்க ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 129 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அசித வன்னிநாயக அரைச்சதம் ஒன்றை கடந்திருந்தார். வன்னிநாயக 11 பெளண்டரிகள் உடன் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதனை அடுத்து புனித அந்தோனியர் கல்லூரி அணிக்கு மத்திய வரிசை வீரர்களும் தமது சிறிய பங்களிப்பு மூலம் ஓட்டங்கள் சேர்த்து உதவினர். இதனால், 76 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களுடன் வலுப்பெற்றவாறு புனித அந்தோனியர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

Photos: Trinity College vs St. Anthony’s College – 102nd Battle of the Blues | Day 1

புனித அந்தோனியர் கல்லூரி அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் தீக்‌ஷ குணசிங்க 25 ஓட்டங்களை குவித்து ஓரளவு ஆறுதல் தந்திருந்தார்.

இதேநேரம் திரித்துவக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கவிஷ்க சேனாதீர 98 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அபிஷேக் ஆனந்தகுமார் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி அணி, மலையக நீலங்களின் சமர் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.

திரித்துவக் கல்லூரி அணியில் பறிபோயிருந்த விக்கெட்டாக ஆரம்ப துடுப்பாட்ட ஷேன் குணத்திலக்க அமைந்திருந்தார். குணத்திலக்க 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். அதேநேரம், களத்தில் சானுக்க குமாரசிங்க 13 ஓட்டங்களுடனும், அபிஷேக் ஆனந்தகுமார் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result

Match drawn

Trinity College
173/10 (72)

St. Anthony’s College
298/8 (76)

Batsmen R B 4s 6s SR
C Wickramasinghe c & b Kavishka Senadeera 128 190 4 1 67.37
A Wanninayake lbw b Kavishka Senadeera 54 66 11 0 81.82
G Ebert c Ruvin Peiris b Abishek Anandakumar 4 8 0 0 50.00
T Gunasinghe c Chanuka Kumarasinghe b U H Wimaladarma 25 37 3 0 67.57
L Werellagama lbw b Kavishka Senadeera 21 50 0 0 42.00
T Abeykoon c & b 21 23 0 0 91.30
K Senarathna c Jeff Weerasinghe b Abishek Anandakumar 11 14 0 0 78.57
G Achintha run out () 8 13 0 0 61.54
M Kamil not out 7 9 0 0 77.78
S Hirudika not out 5 3 0 0 166.67


Extras 14 (b 4 , lb 6 , nb 4, w 0, pen 0)
Total 298/8 (76 Overs, RR: 3.92)
Did not bat N Jayathilaka,

Bowling O M R W Econ
Ruvin Peiris 11 0 68 0 6.18
Avishka Senadeera 4.3 0 25 0 5.81
Pubudu Bandara 0.3 0 1 0 3.33
Kavishka Senadeera 26 1 98 4 3.77
Abishek Anandakumar 25 4 77 2 3.08
Shene Gunathilake 2 0 5 0 2.50
U H Wimaladarma 7 0 14 0 2.00


Batsmen R B 4s 6s SR
Shene Gunathilake c G Achintha b C Wickramasinghe 2 9 0 0 22.22
Abishek Anandakumar b S Hirudika 4 44 0 0 9.09
Chanuka Kumarasinghe st b N Jayathilaka 33 77 6 0 42.86
Avishka Senadeera c T Gunasinghe b S Hirudika 0 11 0 0 0.00
Ashan Lokukatiya b N Jayathilaka 17 42 3 0 40.48
Umair Raizan lbw b N Jayathilaka 10 34 0 0 29.41
Dinitha Siriwardena c L Werellagama b K Senarathna 2 13 0 0 15.38
Kavishka Senadeera lbw b N Jayathilaka 12 14 2 0 85.71
Uvindu Wimaladharma c L Werellagama b N Jayathilaka 10 64 2 0 15.62
Pubudu Bandara c S Hirudika b K Senarathna 60 99 8 2 60.61
Ruvin Peiris not out 9 28 2 0 32.14


Extras 14 (b 9 , lb 0 , nb 4, w 1, pen 0)
Total 173/10 (72 Overs, RR: 2.4)
Bowling O M R W Econ
S Hirudika 11.1 7 8 3 0.72
C Wickramasinghe 6 3 15 1 2.50
K Senarathna 19 5 57 1 3.00
N Jayathilaka 28 13 57 5 2.04
G Ebert 3 0 9 0 3.00
A Wanninayake 5 1 18 0 3.60