இலங்கையின் மாபெரும் மெய்வல்லுனர் தொடர்களில் ஒன்றான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஏற்கனவே திட்டமிட்டவாறு இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுடன் 100வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பை விசேட விழாவுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக குறித்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த இந்த விழாவானது ஏப்ரல் 7ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, 100வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் எதிர்வரும் 8ம் திகதி முதல் 10ம் திகதிவரை தியகமவில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
>> 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பு
இந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வீரர்கள் தேர்வாக அமையும் என்பதுடன், தொடரில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு வீர, வீராங்கனைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<