இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் அறிமுகப்படுத்த இருக்கும் 100 பந்துகள் போட்டியின் உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகள் வெளியாகியுள்ளன.
எத்தனை நாட்கள் ஆனாலும் வெற்றி என்ற முடிவு கிடைக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன் பின் நேரமின்மை காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்களாக குறைந்தது. டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமானது. அதன்பின் 20 ஓவர்கள் கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து டி-10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை 100 பந்துகள் போட்டியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களுக்கு இடையில் நடைபெறுகின்ற கவுண்டி கிரிக்கெட்டில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அண்மையில் வழங்கியிருந்தது.
இதன்படி, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் (The Hundred) என்ற பெயருடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, விளையாட்டு விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள்..
அதன்படி, ஒவ்வொரு இன்னிங்சும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை (Bowling End) மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 அல்லது 10 பந்துகள் வீசலாம். அதிகபட்சமாக 20 பந்துகள்தான் வீச முடியும்.
இது இவ்வாறிருக்க, 100 பந்துகள் கிரிக்கெட் தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் கருத்து வெளியிடுகையில்,
நாங்கள் உருவாக்கிய மூலோபாயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் கிரிக்கெட் வளர்ச்சிக்காக மேற்கொள்கின்ற சிறந்த முதலீடாகவும் இது மாற்றம் பெறவுள்ளது.
எனவே இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஐந்தாண்டு திட்டங்களில் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த போட்டித் தொடர் குறித்த முழுமையான திட்ட வரைபு எதிர்வரும் 2019 ஜனவரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
அது மாத்திரமின்றி, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரனாது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 100 பந்துகள் போட்டிகளானது இங்கிலாந்தின் மிட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கழகங்களுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவருவதுடன், 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் வோர்விக்ஷெயார் கழகம் ஒரு போட்டியிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க