இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் பிரதான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (5) மொத்தமாக ஆறு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
சதம் விளாசி திறமையினை நிரூபித்த மிலிந்த சிறிவர்தன
இன்றைய போட்டிகளின் முடிவுகளை நோக்கும் போது இந்த தொடரில் திசர பெரேரா தலைமையிலான இலங்கை இராணுவப்படை அணி மற்றுமொரு இலகு வெற்றியினை குசல் மெண்டிஸ் தலைமையிலான கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்கு எதிராக 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தது.
அதேநேரம் இன்றைய நாளுக்கான ஏனைய போட்டிகளில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், ப்ளூம்பீல்ட் மற்றும் பதுரெலிய ஆகிய அணிகளும் வெற்றி பெற்றிருந்தன.
மறுமுனையில் இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான சந்துன் வீரக்கொடி 96 ஓட்டங்கள் பெற்று இன்றைய நாளில் பெறப்பட்ட கூடிய ஓட்டங்களைப் பதிவு செய்தார். மறுமுனையில், இராணுவப்படை அணியின் தலைவரான திசர பெரேரா (67), அஷான் பிரியஞ்சன் (57) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சதம் விளாசி திறமையினை நிரூபித்த மிலிந்த சிறிவர்தன
பந்துவீச்சினை நோக்கும் போது தேசிய அணியின் வீரர்களான சீக்குகே பிரசன்ன இராணுவப்படை அணிக்காக 3 விக்கெட்டுக்களையும், ஜீவன் மெண்டிஸ் சோனகர் கிரிக்கெட் கழகம் சார்பில் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கி.க. எதிர் கண்டி சுங்க வி.க.
ப்ளூம்பீல்ட் மைதானம், கொழும்பு
ப்ளூம்பீல்ட் கி.க. – 331/5 (50) நிபுன் ஹக்கல 81, ஹர்ஷ விதான 62*, இமேஷ் மதுஷங்க 2/42
கண்டி சுங்க வி.க. – 171 (34.3) சம்பத் பெரேரா 66, திலிப ஜயலத் 3/05, கயான் சிறிசோம 3/40
முடிவு – ப்ளூம்பீல்ட் அணி 160 ஓட்டங்களால் வெற்றி
இராணுவப்படை வி.க. எதிர் கொழும்பு கி.க.
CCC மைதானம், கொழும்பு
இராணுவப்படை வி.க. – 286/8 (50) ஹிமாஷ லியனகே 92, திசர பெரேரா 67, லஹிரு கமகே 2/35
கொழும்பு கி.க. – 178 (39.5) அஷான் பிரியஞ்சன் 57, குசல் மெண்டிஸ் 43, சீக்குகே பிரசன்ன 3/33, சுமிந்த லக்ஷான் 3/50
முடிவு – இராணுவப்படை வி.க. 108 ஓட்டங்களால் வெற்றி
பதுரெலிய கி.க. எதிர் BRC
சர்ரேய் மைதானம், மக்கோன
BRC – 169 (46) லியோ ப்ரான்சிஸ்கோ 50, புத்திக்க சஞ்சீவ 2/13
பதுரெலிய கி.க. – 172/1 (24.2) சந்துன் வீரக்கொடி 96, திலகரட்ன சம்பத் 63*
முடிவு – பதுரெலிய கி.க. 9 விக்கெட்டுக்களால் வெற்றி
சோனகர் வி.க. எதிர் செபஸ்டியனைட்ஸ் கி.க.
NCC மைதானம், கொழும்பு
சோனகர் வி.க. – 236/9 (50) கவிந்து குலசேகர 75, மொஹமட் சமாஸ் 44, மதீஷ பெரேரா 3/41
செபஸ்டியனைட்ஸ் கி.க. – 209 (46.3) சமீன் கன்தனராச்சி 59, சமல் பெரேரா 48, டிலேஷ் குணரட்ன 16/3, ஜீவன் மெண்டிஸ் 32/2
முடிவு – சோனகர் வி.க. 27 ஓட்டங்களால் வெற்றி
குருநாகல் இளையோர் கி.க. எதிர் பொலிஸ் வி.க.
வெலகதர மைதானம், குருநாகல்
குருநாகல் இளையோர் கி.க. – 327/6 (50) சதீர சதமல் 83, கேஷான் வன்னியாரச்சி 80, சுபுன் மயுர 55/2
பொலிஸ் வி.க. – 226 (43.2) மதுரங்க சொய்ஸா 46, சுபுன் மதுஷங்க 40, கிஹான் அஞ்சன 40/3, நிம்சார அதரகல்ல 41/2
முடிவு – குருநாகல் இளையோர் கி.க. 101 ஓட்டங்களால் வெற்றி
செரசன்ஸ் வி.க. எதிர் கோல்ட்ஸ் கி.க.
கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு
செரசன்ஸ் வி.க. – 205/7 (50) ப்ரமோத் மதுவன்த 82*, ஹர்ஷ ராஜபக்ஷ 33/2
கோல்ட்ஸ் கி.க. – 188 (45.3) ஜெஹான் டேனியல் 59, உதித் மதுஷான் 30/2
முடிவு – செரசன்ஸ் வி.க. 17 ஓட்டங்களால் வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…